Published : 27 Oct 2021 03:10 AM
Last Updated : 27 Oct 2021 03:10 AM

ஆன்லைன் பண மோசடி குறித்து ஓய்வூதியர்களுக்கு விழிப்புணர்வு :

திருச்சி: திருச்சி மாவட்ட ஓய்வூதியர்கள் சங்க செயற்குழு கூட்டம் திருச்சியில் அண்மையில் நடைபெற்றது.

சங்கத் தலைவர் வி.என்.வெங்கடாசலம் தலைமை வகித்தார். துறையூர் வட்டத் தலைவர் டி.அருணாச்சலம் வரவேற்றார். செயலாளர் ஆர்.முத்தையன் கூட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கினார். பொருளாளர் கே.ராஜகோபால் வரவு செலவு கணக்கை தாக்கல் செய்தார்.

இக்கூட்டத்தில், எஸ்எம்எஸ் மூலமாக ஓடிபி அனுப்பியோ அல்லது வேறு வகையிலோ வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுக்கப்படும் மோசடி நிகழ்வுகள் அதிகமாக நடைபெறுவதால், அவ்வாறு பணம் எடுக்கப்பட்டவுடன் அடுத்த 24 மணி நேரத்துக்குள் 155260 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவித்தால், பணத்தை பாதுகாக்க முடியும் என ஓய்வூதியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x