Published : 25 Oct 2021 03:08 AM
Last Updated : 25 Oct 2021 03:08 AM

சிவன்மலையில் மரக்கன்றுகள் நடும் விழா உயர் நீதிமன்ற நீதிபதிகள் பங்கேற்பு :

காங்கயம்: காங்கயம் அருகே சிவன்மலை அடிவாரப் பகுதியில் இந்து சமய அறநிலையத் துறை மற்றும் துளிகள், வனத்துக்குள் திருப்பூர் ஆகிய அமைப்புகள் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நேற்று நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், வி.பாரதிதாசன், ஆர்.சுரேஷ்குமார், எஸ்.எஸ்.சுந்தர், செந்தில்குமார் ராமமூர்த்தி, பி.புகழேந்தி ஆகியோர் மரக்கன்றுகளை நட்டு விழாவை தொடங்கிவைத்தனர். காங்கயம் ஒன்றிய குழுத் தலைவர் டி.மகேஷ்குமார், வனத்துக்குள் திருப்பூர், துளிகள் அமைப்பினர், பொதுமக்கள் பங்கேற்று மரக்கன்றுகளை நட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x