Published : 25 Oct 2021 03:08 AM
Last Updated : 25 Oct 2021 03:08 AM
கோவை நேரு விளையாட்டரங்கு அருகே உள்ள மருதம் கோ-ஆப்டெக்ஸ் விற்பனைநிலையத்தில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தொடங்கி வைத்தார்.
பின்னர், அவர் கூறும் போது.‘‘கோவையில் ஆர்.எஸ்.புரம், காந்திபுரம் ஆகிய இடங்களில் மருதம் கோ-ஆப்டெக்ஸ், ரயில் நிலையம் சாலையில் வண்ணமலர் கோ-ஆப்டெக்ஸ், சாயிபாபா காலனியில் பாலமுருகன் கோ-ஆப்டெக்ஸ் ஆகிய விற்பனைநிலையங்கள் உள்ளன. அனைத்து விற்பனை நிலையங்களிலும் கைத்தறி ரகங்களுக்கு 30% சிறப்பு தள்ளுபடி வழங்கப் படுகிறது.
நடப்பாண்டு தீபாவளிக்கு ரூ.12.15 கோடிக்கு விற்பனை எதிர்பார்க்கப்படுகிறது,’’ என்றார். கோ-ஆப்டெக்ஸின் தலைவர் ஏ.வி.வெங்கடாஜலம், மண்டல மேலாளர் வெற்றிவேல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT