Published : 25 Oct 2021 03:08 AM
Last Updated : 25 Oct 2021 03:08 AM
கோவையில் நடைபெற்ற தேசிய சாம்பியன்ஷிப் கார் பந்தயத்தின் 2-வது நாள் போட்டியின் முதல் சுற்றில் சென்னை, பெங்களூரு மற்றும் திருச்சூரை சேர்ந்த வீரர்கள் வெற்றி பெற்றனர்.
ஜேகே டயர் சார்பில், 24-வது எப்.எம்.எஸ்.சி.ஐ தேசிய சாம்பியன்ஷிப் கார் பந்தயம், கோவை செட்டிபாளையத்தில் உள்ள கரி மோட்டார்ஸ் ஸ்பீட் ட்ராக்கில் நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்று இரண்டாவது நாள் நிகழ்ச்சி நடந்தது. பார்முலா 4 எல்ஜிபி பிரிவில் நடைபெற்ற 2-வது கார் பந்தயத்தில் சென்னையைச்விஷ்ணு பிரசாத் முதலிடமும், தொடர்ந்து நடைபெற்ற 3-வது பந்தயத்தில் 2-வது இடமும் பிடித்தார். 3-வது பந்தயத்தில் பெங்களுரைச் சேர்ந்த சோஹில் ஷா முதலிடம் பிடித்தார். பார்முலா 4 எல்ஜிபி பிரிவில் நடைபெற்ற பந்தயத்தின் இடையே கார் ஒன்று விபத்துக்குள்ளானதால் போட்டியில் சிறிது நேரம் பாதிப்பு ஏற்பட்டது.
நோவிஸ் கோப்பை பிரிவில் பெங்களூரைச் சேர்ந்த சிறுவன் ருஹான் ஆல்வா, நேற்று முன்தினம்நடைபெற்ற பந்தயத்தில் முதலிடம்பிடித்திருந்தார். அதன் தொடர்ச்சியான நேற்று நடைபெற்ற 3-வது பந்தயத்திலும் அவர் முதலிடம் பிடித்தார். கான்டினென்டல் ஜிடி கோப்பைக்கான மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஹூப்ளியைச்சேர்ந்த வீரர் அனிஷ் தாமோதரஷெட்டி, திருச்சூர் ஆல்வின் சேவியரைக் காட்டிலும் 8.643 வினாடிகள் முன்னிலை பெற்று முதலிடம் பிடித்தார். இதில் 18 மோட்டார்சைக்கிள் பந்தய வீரர்கள் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT