Published : 25 Oct 2021 03:08 AM
Last Updated : 25 Oct 2021 03:08 AM
கோவை: கோவையில் சிறுமியை கடத்தி பாலியல் கொடுமை செய்த வழக்கில், ஓட்டுநருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
கோவை மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த தம்பதி ஒருவருக்கு 16 வயதில் மகள் உள்ளார். கடந்த 2017-ம் ஆண்டு மே மாதம், சிறுமி மாயமானார்.
இதுதொடர்பாக அவரது பெற்றோர், பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். காவல்துறையினரின் விசாரணையில், பெரியநாயக்கன்பாளையம் அருகேயுள்ள நாயக்கனூர் பகுதியைச் சேர்ந்த வாடகை கார் ஓட்டுநரான ஆனந்தகுமார் (32) சிறுமியை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்று பாலியல் கொடுமை செய்தது தெரியவந்தது. இதையடுத்து பெரியநாயக்கன்பாளையம் காவல்துறையினர், போக்சோ சட்டப்பிரிவின் கீழ், வழக்குபதிந்து ஆனந்தகுமாரை கைது செய்து சிறுமியை மீட்டனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை கோவை போக்சோ நீதிமன்றத்தில் நடந்தது. விசாரணையின் இறுதியில் ஆனந்தகுமார் மீது குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, நீதிபதி ஜி.குலசேகரன் தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வழக்கறிஞர் ரஷீதா பேகம் ஆஜரானார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT