Published : 25 Oct 2021 03:08 AM
Last Updated : 25 Oct 2021 03:08 AM
வட சென்னை பகுதியைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் பலர், முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் நேற்று காலை நடந்த நிகழ்வில் திரு.வி.க.நகர் தெற்கு பகுதி அதிமுக செயலாளர் கே.சுப்புரு, வடசென்னை தெற்கு (கிழக்கு) மாவட்ட அதிமுக பொருளாளர் ஆர்.மகேஷ், மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் கே.ராஜா முகமது, வடசென்னை வடகிழக்கு மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் பி.புகழேந்தி ஆகியோர், முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
மேலும், வடசென்னை கிழக்குமாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் எஸ்.பி.எஸ்.ராஜா, இந்திய மருத்துவ சங்க தமிழ்நாடு மாநிலதலைவர் மருத்துவர் பி.செந்தமிழ்பாரி, பெரம்பூர் பகுதி எம்ஜிஆர் மன்ற செயலாளர் கே.எஸ்.அஸ்லாம், வட்டச் செயலாளர் எஸ்.பரிமளம், ஆர்.கே.நகர் மேற்கு பகுதி துணைச் செயலாளர் எஸ்.வி.ரவி, அமமுக மாநில வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் எம்.எல்.ஜெகன் உள்ளிட்டோரும் திமுகவில் இணைந்தனர்.
அவர்களுக்கு திமுக உறுப்பினர்அட்டையை முதல்வர் வழங்கினார்.அப்போது அமைச்சர் பி.கே.சேகர்பாபு, எம்.பி. கலாநிதி வீராசாமி, சென்னை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தா.இளையஅருணா, எம்எல்ஏக்கள் தாயகம் கவி, ஆர்.டி.சேகர், ஜே. ஜான் எபினேசர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT