Published : 25 Oct 2021 03:08 AM
Last Updated : 25 Oct 2021 03:08 AM
லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு, சிறப்பு அஞ்சல் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது.
இந்திய அஞ்சல் துறை சார்பில், லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரம் வரும் 26-ம் தேதி முதல்நவ. 1-ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக வரும் 28-ம் தேதி அண்ணா சாலை தலைமை அஞ்சலகத்தில் சிறப்பு குறைதீர் முகாம் நடைபெற உள்ளது. எனவே, அண்ணா சாலை தலைமை அஞ்சலகம் மூலமாக, தபால் சேவைகள் பெற்று வரும் பயனாளிகள், சேவைகளில் ஏதேனும் குறைகள் இருப்பின் அவற்றை தபால் வாயிலாகவோ அல்லது doannaroadhpo.tn@indiapost.gov.in என்ற மின்னஞ்சல் வாயிலாகவோ வரும் 26-ம் தேதிக்குள் தலைமை அஞ்சலக அதிகாரி, அண்ணா சாலை தலைமை அஞ்சலகம், சென்னை- 600 002 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
மேலும், பயனாளிகள் விருப்பப்பட்டால் 28-ம் தேதியன்று நடைபெறும் சிறப்பு குறைதீர் முகாமிலும் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT