Published : 25 Oct 2021 03:09 AM
Last Updated : 25 Oct 2021 03:09 AM

பாப்ஸ்கோ தீபாவளி சிறப்பு விற்பனை அங்காடி : ஆளுநர், முதல்வர் தொடங்கி வைத்தனர்

புதுச்சேரி

புதுச்சேரி தட்டாஞ்சாவடி ஒழுங்குமுறை விற்பனைக் கூட வளாகத் தில் பாப்ஸ்கோ தீபாவளி சிறப்புவிற்பனை அங்காடி அமைக்கப்பட் டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. துணைநிலை ஆளுநர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர். அமைச்சர் சாய் ஜெ சரவணன்குமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அப்போது ஆளுநர் தமிழிசை செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தற்போது திறக்கப்பட்டுள்ள தீபாவளி சிறப்பு விற்பனை அங்காடியில் மலிவு விலையில் அனைத்து மளிகை பொருட்கள் மற்றும் பட்டாசுகள் விற்பனைக்கு கிடைக்கிறது. கரோனா காலத்தி லும், கரோனாவுக்கு பிந்தைய காலத்திலும் பொருளாதார பாதிப் பில் இருந்துவரும் மக்களுக்கு இந்த அங்காடி மிகுந்த பலனுள்ளதாக இருக்கும்.

இது மக்களுக்கு ஆறுதலை தரும். பொதுமக்கள் கரோனா பாதுகாப்பு விதிமுறை களை கடைபிடித்து பொருட்களை வாங்க வேண்டும் என்றார்.

முதல்வர் ரங்கசாமி கூறுகை யில், “மூன்றாண்டுகளுக்குப் பிறகு தற்போது தீபாவளி சிறப்பு விற்பனை அங்காடியை புதுச்சேரி அரசு திறந்துள்ளது. தீபாவளி சமயத்தில் பொருட்களின் விலை யேற்றத்தை கட்டுப்படுத்தும் நோக்கில், தற்போது இந்த அங்காடி திறக்கப்பட்டுள்ளது. மக்க ளுக்கு குறைவான விலையில் பொருட்கள் கிடைக்கும்.

கரோனா காலத்தில் தொழில் கள் பாதிக்கப்பட்டு, மக்கள் பொரு ளாதார சிக்கலில் உள்ள நிலையில், தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாட உதவும் வகையில் புதுச்சேரி அரசு இந்த மலிவு விலை விற்பனை அங்காடியை திறந்துள்ளது. குறிப்பாக ரூ.1,500-க்கு பொருட்கள் வாங்கினால் ரூ.552 மானியமாகக் கிடைக்கும். நலிவடைந்து மூடப்பட்டுவிடும் என்ற நிலையிலிருந்த பாப்ஸ்கோ நிறுவனத்தை புதுப்பிக்கும் வகையில், தீபாவளி சிறப்பங்காடி திறக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பாப்ஸ்கோ நிறுவனம் புத்துயிர் பெறும். அரசு சார்பு நிறுவனங்களில் பல மாதங்களாக ஊதியமின்றி பணியாற்றுவோருக்கு 2 மாத ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக் கப்பட்டுள்ளது. ரேஷன் கடைகளை திறக்கவும், பள்ளிகளை திறக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.தீபாவளியையொட்டி பொதுமக்க ளுக்கு உபயோகமாக புதிய அறிவிப்புகள் வெளியிட வாய்ப்பு ள்ளது” என்றார்.

இந்த சிறப்பு அங்காடி நேற்று முதல் நவம்பர் 3-ம் தேதி வரை காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x