Published : 25 Oct 2021 03:10 AM
Last Updated : 25 Oct 2021 03:10 AM

சம்பா நெல் பயிருக்கு காப்பீடு செய்ய நவ. 15-ம் தேதி கடைசி நாளாக அறிவிப்பு :

ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்தில் அக்ரிகல்சுரல் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் மூலம் பயிர்காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

நடப்பு சம்பா பருவத்தில் ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 28 பிர்காக்கள் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளன. இந்த பிர்காக்களில் உள்ள அனைத்து வருவாய் கிராம விவசாயிகளும் காப்பீடு திட்டத்தில் சேரலாம். நெல்-2 பயிருக்கு பிரீமியத் தொகையாக ஏக்கருக்கு ரூ.528 செலுத்த வேண்டும்.

விவசாயிகள் பயிர்க்கடன் பெறும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாக தங்கள் விருப்பத்தின் பேரில் காப்பீட்டினைபதிவு செய்து கொள்ளலாம். கடன் பெறா விவசாயிகள், நடப்பு பசலி ஆண்டுக்கான அடங்கல் அல்லது பயிர் சாகுபடி சான்றை கிராம நிர்வாக அலுவலரிடம் பெற்று, அதனுடன் வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் மற்றும் சிட்டா ஆகியவற்றை பதிவு செய்து காப்பீடு பெறலாம்.

சம்பா நெல் பயிருக்கு காப்பீடு செய்ய நவம்பர் 15-ம் தேதி கடைசி நாளாகும். இறுதி நேர கூட்ட நெரிசலை தவிர்க்கவும், விண்ணப்பங்கள் விடுபடாமல் இருக்கவும் பிரதமரின் திருந்திய பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் குத்தகை விவசாயிகள் உள்பட அனைத்து விவசாயிகளும் முன் கூட்டியே காப்பீடு பதிவு செய்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு ஈரோடு மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளஅறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x