Published : 25 Oct 2021 03:10 AM
Last Updated : 25 Oct 2021 03:10 AM

இல்லம் தேடி கல்வி திட்டத்துக்கு ஆதரவு; தமிழக ஆசிரியர் கூட்டணி அறிவிப்பு :

திருவாரூர்: திருவாரூர் மாவட்ட தமிழக ஆசிரியர் கூட்டணியின் பொதுக்குழுக் கூட்டம் மாவட்டத் தலைவர் லட்சுமி தலைமையில் மன்னார்குடியில் நேற்று நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் நேருதாசன், மகளிரணி செயலாளர் கனிமொழி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்ததுடன், போராட்டத்தில் ஈடுபட்ட நாட்களை பணிக்காலமாக அறிவித்து உத்தரவிட்ட தமிழக அரசுக்கும், முதல்வருக்கும் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், ஆசிரியர்களின் மேல்படிப்புக்காக ஊக்க உதவித்தொகையை தமிழக முதல்வர் வழங்க வேண்டும். பள்ளிக்கல்வித் துறை சார்பில் செயல்படுத்தப்பட உள்ள இல்லம் தேடி கல்வித் திட்டத்துக்கு தமிழக ஆசிரியர் கூட்டணி முழு ஆதரவு அளிக்கும் என்பன உள்ளிட்ட தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக, தமிழக ஆசிரியர் கூட்டணியின் 19-வது ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு, மன்னார்குடி வட்டாரக் கல்வி அலுவலக வாயிலில் சங்கத்தின் கொடி ஏற்றப்பட்டது. ஆசிரியர்களுக்கு மரக்கன்று வழங்கி, பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x