Published : 25 Oct 2021 03:10 AM
Last Updated : 25 Oct 2021 03:10 AM
தஞ்சாவூர் சமுத்திரம் ஏரியை புனரமைத்து, படகு சவாரி விடும் பணிக்காக ரூ.8.84 கோடிக்கு திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது என ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்தார்.
தஞ்சாவூர் அருகே புன்னைநல் லூர் மாரியம்மன் கோயிலில் உள்ள சமுத்திரம் ஏரியை நேற்று பார்வையிட்டு, ஆய்வு செய்த ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது:
கல்லணைக் கால்வாய் பாசன அமைப்பில் அமைந்துள்ள வர லாற்று சிறப்பு மிக்க சமுத்திரம் ஏரி மூலம் 6 கிராமங்களில் உள்ள 1,116 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகின்றன. புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் இந்த சமுத்திரம் ஏரியை ஒரு பொழுதுபோக்கு தலமாக பயன்படுத்த விரும்புகின்றனர்.
எனவே, ஏரியில் தலைப்பு மதகு மற்றும் உபரிநீர் கலிங்கு ஆகியவற்றை மறுகட்டுமானம் செய்யவும், ஏரியின் கரை களைப் பலப்படுத்தவும் திட்ட மிடப்பட்டுள்ளது. மேலும், சமுத்திரம் ஏரியில் படகு சவாரி செல்ல வசதியாக ஏரியை ஆழப்படுத்தி, சிறுவர் பூங்கா, சிறுவர் விளையாட்டுத் திடல், அழகு விளக்கொளி, புல்வெளி அமைப்பு, பார்வையாளர்கள் உட்காரும் வசதியுடன் கூடிய நடைபாதை வசதி ஆகியவற்றை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இப்பணிக்காக 2020-2021 விலைப் புள்ளி அட்டவணையின்படி, ரூ.8.84 கோடிக்கு திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது என்றார்.
ஆய்வின்போது, உதவி செயற் பொறியாளர் சண்முகவேல், உதவி பொறியாளர் அன்புச்செல்வன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரபாகரன், அறிவானந்தம் உள் ளிட்டோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT