Published : 25 Oct 2021 03:11 AM
Last Updated : 25 Oct 2021 03:11 AM

நிறுவனங்களில் தொழில் பழகுநர் பயிற்சி பெற நாளை சேர்க்கை முகாம் :

மயிலாடுதுறை: தேசிய தொழில் பழகுநர் பயிற்சி அபிவிருத்தி திட்டத்தின்கீழ் தொழில் பழகுநர் பயிற்சிக்கான சேர்க்கை முகாம், மயிலாடுதுறை ஏழுமலையான் தனியார் தொழிற்பயிற்சி நிலையத்தில் நாளை(அக்.26) காலை 9 மணி அளவில் நடைபெற உள்ளது.

முகாமில், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், ஆவின் உள்ளிட்ட அரசு பொதுத் துறை நிறுவனங்கள், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று, ஐடிஐ பயிற்சி பெற்றவர்களை தொழில் பழகுநர் பயிற்சிக்காக தேர்வு செய்ய உள்ளன. மேலும் 8, 10-ம் வகுப்பு, பிளஸ் 2 கல்வித் தகுதி உடையவர்களை நேரடியாக தொழிற்சாலைகளில் பயிற்சியாளர்களாக சேர்த்து, அடிப்படை பயிற்சி, தொழில் பழகுநர் பயிற்சி அளித்து, தேசிய தொழில் பழகுநர் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. இந்த தொழிற்பயிற்சிக்கு நிறுவனம் சார்பில் மாதந்தோறும் ரூ.7,000 உதவித்தொகை வழங்கப்படும்.

மேலும் தகவல்களுக்கு உதவி இயக்குநர், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், மயிலாடுதுறை என்ற முகவரியில் நேரிலோ அல்லது 04362 27822 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்புகொண்டு அறியலாம் என ஆட்சியர் ரா.லலிதா தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x