Published : 24 Oct 2021 03:08 AM
Last Updated : 24 Oct 2021 03:08 AM
ஒட்டன்சத்திரம் தொகுதியில் புதிய குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது என்று அமைச்சர் அர.சக்கரபாணி தெரிவித்தார்.
திண்டுக்கல் மாவட்டம், தொப்பம்பட்டியில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை சார்பில் உழவர் விழா நடைபெற்றது. மாவட்ட வேளாண் இணை இயக்குநர் பாண்டித்துரை தலைமை வகித்தார். வேளாண் துணை இயக்குநர் விஜயராணி வரவேற்றார். அமைச்சர் அர.சக்கரபாணி வேளாண் கண்காட்சியை தொடங்கி வைத்து, விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங் கினார். நிகழ்ச்சியில் அமைச்சர் பேசியதாவது: ஒட்டன்சத்திரம் தொகுதியில் விளையும் பயிர்களை சேமித்து வைக்க குளிர்ப்பதனக் கிடங்கு அமைக்க 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அமராவதி மற்றும் சண்முகநதியில் இருந்து வீணாக கடலில் கலக்கும் உபரி நீரை பயன்படுத்தி ஒட்டன்சத்திரம் தொகுதி மக்களின் குடிநீர் தேவை யை பூர்த்தி செய்யும் வகையில் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது என்று கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT