Published : 24 Oct 2021 03:09 AM
Last Updated : 24 Oct 2021 03:09 AM

பிரம்ம குமாரிகள் அமைப்பு சார்பில் நெல்லையில் மதநல்லிணக்க கருத்தரங்கு :

திருநெல்வேலியில் பிரம்ம குமாரிகள் அமைப்பு மற்றும் சர்வசமய கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற மதநல்லிணக்க கருத்தரங்கில் மத் பரசமய கோளரி நாத ஆதீன குருமகா சன்னிதானம் ல புத்தாத்மாநந்தா சரஸ்வதி சுவாமிகள் சிறப்புரையாற்றினார். படம்: மு.லெட்சுமி அருண்

திருநெல்வேலி

திருநெல்வேலியில் பிரம்ம குமாரிகள் அமைப்பு , மற்றும் திருநெல்வேலி சர்வசமய கூட்டமைப்பு சார்பில் மதநல்லிணக்க கருத்தரங்கு மணிபுரம் சிவ மஹா ஜோதிபவன் ராஜ யோக தியான நிலையத்தில் நடைபெற்றது.

திருநெல்வேலி சாரதா மகளிர் கல்லூரி செயலாளர் யதீஸ்வரி சரவணபவ பிரியா திருவிளக்கேற்றி ஆசியுரை வழங்கினார். சர்வசமய கூட்டமைப்பு செயலாளர் கோ.கணபதி சுப்பிரமணியன் வரவேற்றார். திருநெல்வேலி மாவட்ட பிரம்ம குமாரிகள் அமைப்பு தலைமை நிர்வாகி புவனேஸ்வரி ஆசியுரை வழங்கினார். பிரம்மகுமாரி திருநெல்வேலி மைய சேவை ஒருங்கிணைப்பாளர் கெடன் சிவபாலன்நோக்கவுரையாற்றினார். திருநெல்வேலி சர்வசமய கூட்டமைப்பு தலைவர் வழக்கறிஞர் பி.டி.சிதம்பரம் தலைமை வகித்தார்.

திருநெல்வேலி மாநகர காவல்துணை ஆணையர் டி.பி. சுரேஷ்குமார் கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசும்போது, ‘‘மனித நேயத்தோடு வாழ்ந்தால்தான் மனிதம் புனிதமாக மிளிரும். பார்வை இல்லாதவர் ஒரு யானையை தொட்டுப் பார்த்தால் அதன் காது முறம் மாதிரிதெரியும். அதனுடைய காலை தொட்டால் தூண் போலதெரியும். இப்படித்தான் கடவுள் பல ரூபங்களில் மனிதர்களுக்கு தெரிந்து கொண்டிருக்கிறார். மார்க்கங்கள் பலவாக இருந்தாலும் நோக்கம் ஒன்றாக இருக்க வேண்டும். அன்பு ஒன்றுதான் பிரதானம். ஒருவரை ஒருவர் அன்பு செய்து நாம் வாழ்ந்தால் மனிதம் புனிதமாக கருதப்படும். எனவே மனித நேயத்தோடு வாழ வேண்டும்’’ என்றார்.

மத் பரசமய கோளரி நாத ஆதீன குருமகா சன்னிதானம் ல புத்தாத்மாநந்தா சரஸ்வதி சுவாமிகள், பாளையங்கோட்டை கத்தோலிக்க மறைமாவட்ட ஆயர் ச. அந்தோணிசாமி, மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை செயலாளர் கே.எப். ஜலீல் அகமது ஆகியோர்சிறப்புரையாற்றினர். சர்வசமய கூட்டமைப்பு துணைத் தலைவர் அ.மரியசூசை, கிறிஸ்து ராஜா மேல்நிலைப்பள்ளி முன்னாள் தலைமையாசிரியர் அருட்சகோதரர் செபஸ்தியான், கம்பன் இலக்கிய சங்க பொருளாளர் மு.அ. நசீர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x