Published : 23 Oct 2021 03:07 AM
Last Updated : 23 Oct 2021 03:07 AM

வடசித்தூர் விஏஓ அலுவலகத்தில் - இந்தியில் ஒட்டப்பட்ட நோட்டீஸை அப்புறப்படுத்திய திமுகவினர் :

பொள்ளாச்சி

கிணத்துக்கடவு ஒன்றியத்துக்கு உட்பட்ட வடசித்தூர் கிராம நிர்வாக அலுவலகத்தில் (விஏஓ) உள்ள தகவல் பலகையில் இந்தியில் அச்சடிக்கப்பட்ட நோட்டீஸ் ஒட்டப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் நோட்டீஸை அகற்றினர்.

சேலத்தில் இருந்து கேரளா மாநிலம் கொச்சிக்கு வடசித்தூர் வழியாக எரிவாயு குழாய் அமைத்து எரிவாயு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. எந்தெந்த கிராமங்களின் வழியாக குழாய் பதிக்கப்படுகிறது என்ற விவரங்கள் அடங்கிய நோட்டீஸ் இந்தியில் அச்சடிக்கப்பட்டு, வடசித்தூரில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்தில் உள்ள தகவல் பலகையில் ஒட்டப்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மாவட்ட பிரதிநிதி பொன்மலை குமாரசாமி தலைமையிலான திமுகவினர் அதிகாரிகளிடம் இந்தியில் அச்சடிக்கப்பட்ட நோட்டீஸை அகற்ற கோரிக்கை விடுத்தனர். பின்னர், திமுகவினரே அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டிருந்த நோட்டீசை அகற்றினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x