Published : 23 Oct 2021 03:07 AM
Last Updated : 23 Oct 2021 03:07 AM

இரு வீடுகளில் 30 பவுன் நகைகள் திருட்டு :

கோவை: கோவை அருகே, இரு வீடுகளின் பூட்டை உடைத்து, 30 பவுன் நகைகளை மர்மநபர்கள் திருடிச் சென்ற சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரிக்கின்றனர்.

கோவை பி.என்.புதூர் முல்லை நகர், 2-வது வீதியைச் சேர்ந்தவர் ஆனந்த் சபேசன்(33). தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றிவரும் இவர், கடந்த மாதம் 26-ம் தேதி வீட்டைப் பூட்டிவிட்டு, குடும்பத்துடன் சொந்த ஊரான கும்பகோணத்துக்குச் சென்றுவிட்டார். சில தினங்களுக்கு முன்னர் கோவைக்கு திரும்பியபோது, வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. பீரோவை உடைத்து 15.5 பவுன் நகைகளை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. சரவணம்பட்டி விநாயகபுரத்தைச் சேர்ந்தவர் புருஷோத்தமன்(62). இவர்,கடந்த 1-ம் தேதி வீட்டைப் பூட்டிவிட்டு, குடும்பத்துடன் பெங்களூருக்குச் சென்று விட்டார். நேற்று முன்தினம் திரும்பி வந்தபோது, வீட்டின் பீரோ உடைக்கப்பட்டு, 14.5 பவுன் நகை, ரூ.1 லட்சம் தொகை திருடப்பட்டது தெரியவந்தது. இரு சம்பவங்கள் குறித்தும் சரவணம்பட்டி போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x