Published : 23 Oct 2021 03:07 AM
Last Updated : 23 Oct 2021 03:07 AM
கோவை: மோசடி வழக்கில் கைதான முன்னாள் எம்.எல்.ஏவின் மருமகன், உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கோவை சாயிபாபா காலனி கணபதி லேஅவுட்டைச் சேர்ந்தவர் அருண்பிரகாஷ்(41). முன்னாள் எம்.எல்.ஏ ஒருவரின் மருமகனான இவர், ரியல் எஸ்டேட் மற்றும் ஹோட்டல் தொழில் செய்துவந்தார். இந்நிலையில், ரூ.1.50 கோடி மோசடி செய்து விட்டதாக செங்குட்டுவன் என்பவர் அளித்த புகாரின்பேரில், மாநகர குற்றப்பிரிவு போலீஸார், கடந்த 19-ம் தேதி அருண்பிரகாஷை கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அருண்பிரகாஷை, அவிநாசி கிளைச் சிறையில் அடைக்க போலீஸார் அழைத்துச் சென்றனர். அப்போது, தனக்கு உடல்நிலை சரியில்லை என அருண்பிரகாஷ் சிறைத்துறை அதிகாரிகளிடம் கூறியுள்ளார். இதையடுத்து, அவரை மருத்துவர்கள் பரிசோதித்தனர். இதைத் தொடர்ந்து, அருண்பிரகாஷ் கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள கைதிகள் வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT