Published : 23 Oct 2021 03:07 AM
Last Updated : 23 Oct 2021 03:07 AM
கோவை மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா வெளியிட்ட செய்திக்குறிப்பு: மெகா கரோனா தடுப்பூசி முகாம் மாநகரில் 269 இடங்களில் 23-ம் தேதி (இன்று) காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடக்கிறது. மாநகரில் 85 முதல் 90 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளனர். 1,73,914 பேர் இரண்டாம் தவணை செலுத்திக் கொள்ள தகுதியுடையவர்களாக உள்ளனர். கோவிஷீல்டு முதல் தவணை செலுத்திக்கொண்டவர்கள் 84 நாட்களுக்கு பிறகும், கோவேக்சின் முதல் தவணை செலுத்திக் கொண்டவர்கள் 28 நாட்களுக்கு பிறகும் இரண்டாவது தவணை தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT