Published : 23 Oct 2021 03:08 AM
Last Updated : 23 Oct 2021 03:08 AM
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை விழா வரும் 28 முதல் 30-ம் தேதி வரை நடைபெற உள்ளது. அக்.29-ம் தேதி தேவர் குருபூஜை விழாவில் வி.கே.சசிகலா பங்கேற்று அஞ்சலி செலுத்த அனுமதியும், தகுந்த பாதுகாப்பும் அளிக்க வேண்டும் என ராமநாதபுரம் மாவட்ட அதிமுக வழக்கறிஞர் அணி இணைச் செயலாளரும், மாணவரணி ஒன்றியச் செயலாளருமான எஸ்.முத்துராமலிங்கம், மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி இணைச்செயலாளர் சரவணன் ஆகியோர், ஆட்சியர் சங்கர்லால் குமாவத், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இ.கார்த்திக் ஆகியோரிடம் நேற்று முன்தினம் மனு அளித்தனர். இந்நிலையில் அதிமுக தலைமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது: ராமநாதபுரம் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளரான ஏ.சரவணன், வழக்கறிஞர் அணி இணைச் செயலாளரும், ஒன்றிய மாணவர் அணிச் செயலாளருமான எஸ்.முத்துராமலிங்கம் ஆகிய 2 பேரும் அவர்கள் வகித்த கட்சிப் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT