Published : 23 Oct 2021 03:09 AM
Last Updated : 23 Oct 2021 03:09 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி வட்டம் அத்திமுகம் பகுதியைச் சேர்ந்தவர் மகபூப்பாஷா. இவரது மகன் சபீர் (14). இவர் அப்பகுதியில் உள்ள உருதுப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த ரவி என்பவரது மகன் அசோக் (12). இவர் அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று சபீர், அசோக் ஆகியோர், அத்திமுகத்தில் உள்ள தனியார் வேளாண்மை கல்லூரிக்கு சொந்தமான குட்டையின் அருகே விளையாடிக் கொண்டிருந்தனர். சிறிது நேரத்தில் குட்டையில் குளிக்க சென்ற 2 பேரும், ஆழமான பகுதிக்கு சென்று நீரில் மூழ்கினர். தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த பேரிகை போலீஸார், அப்பகுதி மக்கள் நீரில் மூழ்கிய சபரி, அசோக்கை சடலமாக மீட்டனர்.
2 பேரின் சடலங்களை உடற்கூறு ஆய்விற்காக கொண்டு செல்ல போலீஸார் முயற்சி செய்த போது, உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், கல்லூரி நிர்வாகம் சுற்றுச்சுவர் அமைக்காமல் இருந்ததால் தான், அசம்பாவிதம் நடைபெற்றுள்ளது. எனவே, உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT