Published : 23 Oct 2021 03:09 AM
Last Updated : 23 Oct 2021 03:09 AM
திருநெல்வேலியில் கோ-ஆப்டெக்ஸ் காந்திமதி விற்பனை நிலையத்தில் தீபாவளி- சிறப்பு தள்ளுபடி விற்பனையை மாவட்ட ஆட்சியர் வே.விஷ்ணு தொடங்கி வைத்தார்.
கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையின்போது தமிழக அரசு வழங்கும் 30 சதவீதம் சிறப்புத் தள்ளுபடி விற்பனை திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது.
திருநெல்வேலி சந்திப்பு, பாளையங்கோட்டை திருநெல்வேலி டவுன் கீழரதவீதி, வடக்கு ரதவீதி ஆகிய 4 இடங்களில் செயல்படும் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை நடைபெறுகிறது. கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகை காலத்தில் திருநெல்வேலி மண்டலத்தில் ரூ.2.91 கோடி துணிமணிகள் விற்பனை செய்யப்பட்டது. இந்த தீபாவளிக்கு விற்பனை இலக்காக ரூ.5.80 கோடி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் கோ-ஆப்டெக்ஸ் திருநெல்வேலி மண்டல மேலாளர் மு.முத்துகுமார், துணை மண்டல மேலாளர் ரா.சிவசுப்பிரமணியன், ரக மேலாளர் எஸ்.ராமச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை காந்திமதி கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலைய விற்பனை லாளர் ஜி.ராமசுப்பிரமணியன் செய்திருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT