Published : 23 Oct 2021 03:09 AM
Last Updated : 23 Oct 2021 03:09 AM
தூத்துக்குடியில் அனைத்து வங்கிகள் சார்பில் மெகா கடன் மேளா நேற்று நடைபெற்றது. இதில், 2,431 பயனாளிகளுக்கு ரூ.129.22 கோடி கடனுதவிகளை கனிமொழி எம்பி மற்றும் அமைச்சர் கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் வழங்கினர்.
பாரத ஸ்டேட் வங்கி மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி சார்பில், மெகா கடன் மேளா தூத்துக்குடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பாரத ஸ்டேட் வங்கியின் பொது மேலாளர் ராதாகிருஷ்ணன் ராயாபரம் தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் முன்னிலை வகித்தார்.
தூத்துக்குடி மக்களவை தொகுதி உறுப்பினர் கனிமொழி, தமிழக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோர், 2,431 பயனாளிகளுக்கு ரூ.129.22 கோடிக்கான கடன் ஆணைகளை வழங்கினர்.
நபார்டு வங்கி சார்பில் 2022- 2023-ம் ஆண்டுக்கான வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கை வெளியிடப்பட்டது.
பாரத ஸ்டேட் வங்கி தலைமை பொது மேலாளர் சிவானந்த், தூத்துக்குடி உதவி பொது மேலாளர் துரைரராஜ், நபார்டு வங்கி மாவட்ட மேலாளர் சுரேஷ் ராமலிங்கம் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து தூத்துக்குடி அருகேயுள்ள முள்ளக்காடு மற்றும் உடன்குடி அருகேயுள்ள பரமன்குறிச்சி ஆகிய இடங்களில் விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமை யாளர்களின் பட்டா தொடர்பான சிறப்பு முகாம்களை கனிமொழி எம்பி தொடங்கி வைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT