Published : 20 Oct 2021 03:09 AM
Last Updated : 20 Oct 2021 03:09 AM
நாமக்கல் மற்றும் கொல்லிமலை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம், என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
நாமக்கல் மற்றும் கொல்லிமலை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை தொடங்கி உள்ளது. நாமக்கல் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவ, மாணவியருக்கு எலக்ட்ரீசியன், டிராப்ட்ஸ்மேன் (சிவில்), மெஷினிஸ்ட், மெக்கானிக் ஆட்டோபாடி ரிப்பேர் ஆகிய தொழிற்பிரிவிற்கு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. மாணவியருக்கு மட்டும் ஓராண்டு படிப்பாக கம்ப்யூட்டர் ஆபரேட்டர், புரோகிராமிங் அசிஸ்டென்ட் மற்றும் இரண்டு ஆண்டு தகவல் மற்றும் கம்யூனிகேஷன் டெக்னாலஜி, சிஸ்டம் பராமரிப்பு போன்ற தொழிற்பிரிவுகளுக்கு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. இவற்றில் சேர எஸ்எஸ்எல்சி தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர் விண்ணப்பிக்கலாம். அக்.,30-ம் தேதி வரை www.skilltraining.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.
இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க இயலாதவர்கள் நாமக்கல் அரசு தொழிற்பயிற்சி நிலையத்திற்கு நேரில் வந்து விண்ணப்பிக்கலாம். மேலும், விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப கட்டணமாக ரூ.50 இணையதளம் வாயிலாக செலுத்த வேண்டும். அவ்வாறு விண்ணப்பிக்க வரும் போது தங்களது மதிப்பெண் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் மற்றும் மாற்று சான்றிதழ், முன்னுரிமை சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றை உடன் கொண்டுவரவேண்டும். மேலும் விவரங்களுக்கு 04286-267876 என்ற அலுவலக எண்ணை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT