Published : 19 Oct 2021 03:07 AM
Last Updated : 19 Oct 2021 03:07 AM

காளப்பட்டி சாலையில் ஆக்கிரமிப்பு அகற்றம் :

கோவை: கோவை அவிநாசி சாலை விமானநிலைய சந்திப்பிலிருந்து (சிட்ரா), சத்தியமங்கலம் சாலையையும் மற்றும் வெள்ளக்கிணறு வழியாக மேட்டுப்பாளையம் சாலையையும் சென்றடையும் வகையில் காளப்பட்டி சாலை உள்ளது. இந்த சாலையின் இருபுறங்களிலும் அதிகளவில் கடைகள் அமைக்கப்பட்டிருப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக, பொதுமக்கள் தரப்பில் புகார்கள் எழுந்தன. மேலும், உதகை செல்வதற்காக ஆளுநர், முதல்வர் உட்பட முக்கிய பிரமுகர்கள் இச்சாலையை அதிகம் பயன்படுத்துவதால், நான்கு வழிப் பாதையாக மாற்ற நெடுஞ்சாலைத் துறை மூலம் ரூ.27 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, கோவை நெடுஞ்சாலை உதவி கோட்டப் பொறியாளர் ஆறுமுகம், உதவிப் பொறியாளர் பசும்பொன், மாநகராட்சி கிழக்கு மண்டல உதவி நகரமைப்பு அலுவலர் புவனேஸ்வரி உள்ளிட்ட அதிகாரிகள், ஜேசிபி, பொக்லைன் இயந்திரங்கள் மற்றும் லாரிகள் மூலம் விமானநிலைய சந்திப்பு முதல் காளப்பட்டி வரை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் நேற்று ஈடுபட்டனர். இதில், பல்வேறு கடைகளின் முகப்பு பகுதிகள், முகப்பு மேற்கூரைகள் உள்ளிட்டவை இடிக்கப்பட்டன. இப்பணி மேலும் சில தினங்களுக்குத் தொடரும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x