Published : 19 Oct 2021 03:09 AM
Last Updated : 19 Oct 2021 03:09 AM
ஆதரவற்ற விதவைக்கு திடீரென நிறுத்தப்பட்ட நிதியுதவியை மீண் டும் வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிவகிரி கோட்டையூரைச் சேர்ந் தவர் மாரியம்மாள். இவரது கணவர் 2011-ல் இறந்தார். இவர்களுக்கு ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர். இவருக்கு தமிழக அரசின் சிறப்பு நிதியுதவி திட்டத்தின் கீழ், ஆதரவற்ற விதவை என்ற அடிப்படையில் 2012 முதல் 2015 வரை ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது.
2015-ல் எந்தக் காரணமும் இன்றி நிதியுதவி திடீரென நிறுத்தப்பட்டது. மீண்டும் ஆதரவற்ற விதவைக் கான நிதியுதவி வழங்க உத்தர விடக்கோரி மாரியம்மாள், உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்து நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி பிறப்பித்த உத்தரவு: மனுதாரர் கணவரின் இறப்பு சான்றிதழ், வாரிசுச் சான்றிதழ், இதுவரை நிதியுதவி பெற்றதற்கான வங்கி புத்தக நகல், மனுதாரரின் நிதி நிலைமை தொடர்பாக கோட் டையூர் ஊராட்சித் தலைவர் வழங்கியுள்ள சான்றிதழ் ஆகியவற்றை தாக்கல் செய்துள்ளார். அவற்றின் அடிப் படையில் மனுதாரருக்கு 2 மாதத்தில் மீண்டும் ஆதரவற்ற விதவைக்கான நிதியுதவியை வழங்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறப்பட்டிருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT