Published : 19 Oct 2021 03:09 AM
Last Updated : 19 Oct 2021 03:09 AM
மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாகூ ருக்கு சு.வெங்கடேசன் எம்.பி அனுப்பியுள்ள கடிதம்:
பிரசார் பாரதி அமைப்பு தன்னி டமுள்ள வரலாற்று ஆவணங்களை ஏலம் விடப்போவதாக முடிவெ டுத்துள்ளது. இவர்கள் ஏலம் விடப்போகும் ஆவணங்கள் இந்திய வரலாற்றின் மகத்தான சாட்சியங்கள் ஆகும். இது போன்று வரலாற்று ஆவணங்களை விற்பது தேச துரோகமாகும். இந்திய வரலாற்றின் நிகழ்வுகள் அதன் காலம், சூழல் சாராது தவறாகப் பயன்படுத்தப்பட்டால் அது தேசத்தின் அரசியலை, அமைதியை எதிர்மறையாகப் பாதிக்கக்கூடும். கார்ப்பரேட் ஊடகங்கள் கைகளில் இதன் உரிமைகள் செல்வது அறிவார்ந்த செயலாக இருக்காது. இந்த சேமிப்பு ஆவணங்களுக்கு சந்தையில் நல்ல விலையும், தேவையும் இருப்பதால் அதை பணமாக்கப்போவதாக பிரசார் பாரதி அறிவித்துள்ளது.
கண்களில் படுவதையெல்லாம் விற்பதற்கு முயற்சிக்கக்கூடாது. பிரசார் பாரதியின் முடிவை தடுத்து நிறுத்த வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT