Published : 16 Oct 2021 06:13 AM
Last Updated : 16 Oct 2021 06:13 AM
மதுரையில் விதிகளை மீறி புதிதாகக் கட்டியுள்ள வணிக வளாகங்களுக்கு வரி நிர்ணயம் செய்வது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. காலம் கடந்த இந்த ஆய்வு காரணமாக மதுரையில் வாகன நிறுத்தங்கள் இல்லாத கட்டிடங்கள் அதிகரித்திருப்பது தெரிய வந்துள்ளது.
மதுரையில் 72 வார்டுகள் மட்டுமே இருந்தன. 2011-ம் ஆண்டு பேரூராட்சிகள், கிராமப் பஞ்சாயத்துகள் இணைக்கப்பட்டு மாநகராட்சி வார்டுகள் 100 ஆக உயர்த்தப்பட்டுள்ளன. நூறு வார்டுகளில் மொத்தம் 3 லட்சத்து 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டிடங்கள் உள்ளன. இதில், வணிக ரீதியான கட்டிடங்கள் மட்டும் 36 ஆயிரம் உள்ளன. மீதம் உள்ளவை குடியிருப்புகள்.
இந்த கட்டிடங்கள் மீதான சொத்து வரி மூலம் மாநகராட்சிக்கு ஆண்டுக்கு ரூ.97 கோடி வருவாய் கிடைக்கிறது. மாநகராட்சி பகுதி களில் சில ஆண்டுகளாக கட்டி டங்கள் கட்டுவதில் விதிமீறல்கள் நடப்பதாகக் குற்றச்சாட்டு எழுந் துள்ளது. மேலும் கட்டிடங்களுக்கு முறையாக வரி நிர்ணயம் செய்வதில்லை என்றும், வரி நிர்ணயம் செய்யப்படாமலேயே ஏராளமான கட்டிடங்கள், காலி மனைகள் இருப்பதாகவும் சர்ச்சை எழுந்துள்ளது.
அதனால் மாநகராட்சி ஆணை யாளர் கேபி.கார்த்திகேயன், விதிமீறல்கள் நடந்த கட்டிடங்களை ஆய்வு செய்யவும், வரி நிர்ணயம் செய்யப்படாத கட்டிடங்களை கணக் கெடுக்கவும், எதனால் அதற்கு வரி நிர்ணயம் செய்யப்படவில்லை?, அதற்குப் புதிதாக அபராதத்துடன் வரி நிர்ணயம் செய்யலாமா? என்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். தற்போது வார்டு வாரியாக விதிமீறல் கட்டிடங்கள் கணக்கெடுக் கப்படுகின்றன. இதில் 90 சதவீதம் வணிக ரீதியான கட்டிடங்களே இருப்பதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
மதுரை மாநகராட்சி பகுதியில் புதிதாக கட்டப்படும் வீடுகளுக்கு வரி நிர்ணயம் செய்வது நிறுத்தி வைக்கப்படவில்ல. எந்த கட்டிடமும் வரைபட அனுமதி அடிப்படையில் கட்டப்படுவதில்லை. புதிதாக கட்டிய வீடுகளுக்கு வரைபட அனுமதியில் சிறுசிறு விதிமீறல் இருந்தால் விதிமீறல் அளவுக்கு ஏற்ப சதுர அடிக்கு 50 பைசா அபராதம் விதித்து வரி நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்த அபராதம் இத்துடன் முடிந்துவிடுவதில்லை. ஆறு மாதங்களுக்கு ஒருமுறை வரியோடு சேர்த்து ஆண்டுதோறும் கட்ட வேண்டும். வணிக ரீதியான கட்டிடங்களுக்கு வரி நிர்ணயம் செய்வது தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
முன்பு அனைத்து கட்டிடங் களுக்கும் விதிமீறல்களுக்கு ஏற்ப அபராதம் விதித்து வரி நிர்ணயம் செய்யப்பட்டது. அதனால் குடியிருப்புகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் வேகமாக வணிக ரீதியான கட்டிடங்களாக மாற்றப்பட்டு வந்தன. அந்த கட்டிடங்களும் வாகனங்களை நிறுத்தும் வசதி யில்லாமல் விதிமீறல்களோடு கட்டப்பட்டன. அதனால் வணிகக் கட்டிடங்கள் முன் உள்ள நகர சாலைகள் வாகன நிறுத்தமாக பயன்படுத்தப்படுகின்றன.
உதாரணமாக கே.கே.நகர், அண்ணாநகர் ஆகிய பகுதி களில் பெரும்பாலான வணிக நிறு வனங்கள் சாலைகளை வாகன நிறுத்தமாகப் பயன்படுத்துகின்றன.
அதனால், அந்த சாலைகளின் வலது, இடது புறமாக இரு சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் அதிகமா கிவிட்டது.
எனவே குடியிருப்பு பகுதிகளை முடிந்த அளவு வணிக ரீதியான கட்டிடங்களாக மாற்றுவதைத் தடுக்க தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விதிமீறல் இருந்தாலும் வாகன நிறுத்தம் இருந்தால் அவற்றுக்கு அனுமதி வழங்கலாமா?, வாகன நிறுத்தம் இல்லாமல் கட்டிய கட்டிடங்கள் மீது என்ன மாதிரி நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து வழக்கறிஞர்களுடன் மாந கராட்சி ஆலோசித்து வருகிறது. அந்த மாதிரியான வணிக ரீதியான கட்டிடங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து மாநகராட்சி ஆணை யாளரிடம் அறிக்கை வழங்கி வரு கின்றனர்.
இவ்வாறு அவர்கள் தெரிவித் தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT