Published : 16 Oct 2021 06:13 AM
Last Updated : 16 Oct 2021 06:13 AM
மதுரை தல்லாகுளம், செல் லூர், கூடல்புதூர், திருப்பாலை, எஸ்எஸ்.காலனி, அண்ணா நகர், கீரைத்துறை, திருப்பரங்குன்றம், அவனியாபுரம் ஆகிய பகுதிகளில் வாகனங்களில் செல்பவர்களிடம் தொடர்ந்து நகை பறித்தவர் களைப் பிடிக்க காவல் குற்றப் பிரிவு துணை ஆணையர் ராச சேகரன் தலைமையில் உதவி ஆணையர்கள் ரவி (தல்லாகுளம்), சண்முகம் (திருப்பரங்குன்றம்), ஆய்வாளர்கள் கணேசன், சுந்தரி, எஸ்.ஐ. தென்னரசு ஆகியோர் அடங்கிய இரு தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
இவர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கிருஷ்ணாபுரம் காலனி மணி (எ) வைரமணி, அவரது கூட் டாளி பாலசுப்பிரமணியன் ஆகி யோரை தல்லாகுளம் சரக தனிப் படையினரும், மதுரை கல்மேடு பகுதியைச் சேர்ந்த பழனிக்குமார், சிவா, விஜய் ஆகி யோரை திருப்பரங்குன்றம் சரக தனிப்படையினரும் பிடித்தனர்.
விசாரணையில், வைரமணி, பாலசுப்ரமணியன் ஆகியோர் நகரில் 13 இடங்களில் தங்கச் சங்கிலி பறிப்பு சம்பவங்களிலும், இரண்டு இரு சக்கர வாகனங்களை திருடியதும் தெரிய வந்தது. அவர்களிடம் ரூ.33 லட்சம் மதிப்புள்ள 90 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
8 வழக்குகளில் தொடர்புடைய பழனிகுமார், சிவா ஆகியோரிடம் இருந்து ரூ.11 லட்சம் மதிப்புள்ள 30 பவுன் நகைகளும், 4 பேரிடமும் நான்கு இரு சக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
நான்கு பேருக்கும் வாகனம் உள்ளிட்ட உதவிகளை செய்த விஜய் என்பவரும் கைது செய் யப்பட்டார். வழிப்பறி சம்பவங்கள் மூலம் கிடைத்த பணத்தில் வைர மணி ஆடம்பர வீடு ஒன்றை கட்டி வருவதும், ஆந்திராவில் ரேஸ் பயிற்சி எடுப் பதும் தெரிய வந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT