Published : 14 Oct 2021 05:58 AM
Last Updated : 14 Oct 2021 05:58 AM

தென்காசி மாவட்டத்தில் உள்ள - 10 ஊராட்சி ஒன்றியங்களிலும் திமுக கூட்டணி அமோக வெற்றி :

தென்காசி

தென்காசி மாவட்டத்தில் உள்ள 10 ஊராட்சி ஒன்றியங்களில் 144ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிகள்உள்ளன. இதில் திமுக 94 இடங்களிலும், காங்கிரஸ் 12 இடங்களிலும், அதிமுக 13 இடங்களிலும், மற்றவை 25 இடங்களிலும் (மதிமுக 13, அமமுக 2, சுயேச்சை 10) வெற்றி பெற்றுள்ளன.

ஆலங்குளம் ஒன்றியம்: ஆலங்குளம் ஒன்றியத்தில் உள்ள23 வார்டுகளில் திமுக 16 வார்டுகளிலும், காங்கிரஸ் 3 இடங்களிலும், மற்றவை 4 இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளன. இதனால் ஆலங்குளம் ஒன்றியக்குழு தலைவர் பதவியை திமுக கைப்பற்றுகிறது. வார்டு வாரியாக வெற்றி பெற்றவர்கள் விவரம்: வார்டு 1- செல்வக்கொடி (திமுக), 2 - பாலசரஸ்வதி (திமுக), 3- வள்ளியம்மாள் (திமுக),4- முரளிதரன் (காங்கிரஸ்), 5-பால்துரை (திமுக), 6- அந்தோணிசாமி (சுயேச்சை), 7- கிருஷ்ணம்மாள் (சுயேச்சை), 8- மலர்க்கொடி (திமுக), 9- முத்துமாரி (திமுக), 10- சேக்முகம்மது (திமுக), 11- முருகேஸ்வரி (சுயேச்சை), 12- சுபாஷ் சந்திரபோஸ் (திமுக), 13- திவ்யா (திமுக), 14- ஆறுமுகச்சாமி (திமுக), 15- கிருஷ்ணவேணி (திமுக), 16- சுப்புக்குட்டி (சுயேச்சை), 17- கலா (காங்கிரஸ்),18- எழில்வாணன் (திமுக), 19-பசுபதிதேவி (திமுக), 20- அரிநாராயணன் (காங்கிரஸ்), 21- சண்முகராம் (திமுக), 22- சங்கீதா (திமுக), வார்டு 23- மீனா (திமுக).

கடையநல்லூர் ஒன்றியம்: கடையநல்லூர் ஒன்றியத்தில் மொத்தம் உள்ள 12 வார்டுகளில் 11 வார்டுகளை திமுக கைப்பற்றியது. ஒருவார்டில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. இதனால், கடையநல்லூர் ஒன்றியத்தையும் திமுக கைப்பற்றுகிறது.

வார்டு 1- அருணாசலபாண்டியன் (திமுக), 2- கீதா (திமுக), 3- மணிகண்டன் (திமுக), 4- சித்ரா (திமுக),5- சுப்பம்மாள் (திமுக), 6- சண்முகையா (திமுக), 7- பகவதியப்பன் (திமுக), 8- மாரிச்செல்வி (திமுக), 9- மாரியம்மாள் (திமுக), 10- சத்யகலா தீபக் (அதிமுக), 11- ஐவேந்திரன் (திமுக), வார்டு 12- ரோஜா (திமுக).

கடையம் ஒன்றியம்: கடையம் ஒன்றியத்தில் மொத்தம் உள்ள 17 வார்டுகளில் 11 வார்டுகளை திமுக கைப்பற்றியது. அதிமுக 5,காங்கிரஸ் 1 வார்டில் வெற்றி பெற்றன. இதனால், கடையம் ஒன்றியக்குழு தலைவர் பதவியும் திமுக வசமாகிறது.

வார்டு 1- மகேஷ் மாயவன் (திமுக), 2- சங்கர் (திமுக), 3- ஜனதா(அதிமுக), 4- ரம்யா (திமுக), 5- தமிழரசி (திமுக), 6- கணேசன் (அதிமுக), 7- ஆவுடைகோமதி (திமுக), 8- பாலகசெல்வி (திமுக),9- தங்கம் (அதிமுக), 10- செல்லம்மாள் (திமுக), 11- மாரி என்ற இசக்கிகுமார் (காங்கிரஸ்), 12- மணிகண்டன் (அதிமுக), 13- ஜெயக்குமார் (திமுக), 14- ஜஹாங்கீர் (திமுக), 15- புஷ்பராணி (திமுக), 16- சுந்தரி (திமுக), வார்டு 17- இசக்கியம்மாள் (அதிமுக).

கீழப்பாவூர் ஒன்றியம்: கீழப்பாவூர் ஒன்றியத்தில் உள்ள19 வார்டுகளில் திமுக 9 வார்டுகளிலும், காங்கிரஸ் 4, அதிமுக 3, மதிமுக 1, சுயேச்சை 2 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளன. ஒன்றியக்குழு தலைவர் பதவியை திமுக கூட்டணி கைப்பற்றுகிறது.

வார்டு 1- ஜான்சி ஜெயமலர் (திமுக), 2 -முருகேசன் (சுயேச்சை),3 - கனகஜோதி (காங்கிரஸ்), 4- தர்மராஜா (திமுக), 5- டோ நான்சி (திமுக), 6- ஹேமா (திமுக), 7-மகேஸ்வரி (திமுக), 8- புவனா (அதிமுக), 9- காவேரி (திமுக), 10- அருமை (அதிமுக), 11- முத்துக்குமார் (காங்கிரஸ்), 12- ராஜேஸ்வரி(திமுக), 13- மரிய செல்வமேரி (காங்கிரஸ்), 14- வளன்ராஜா (திமுக), 15- ராம உதயசூரியன் (மதிமுக), 16- சுரேஷ் லிகோரி (அதிமுக), 17- ராதாகுமாரி (காங்கிரஸ்), 18- சரவணன் (சுயேச்சை), வார்டு 19- நாகராஜன் (திமுக).

குருவிகுளம் ஒன்றியம்: குருவிகுளம் ஒன்றியத்தில் உள்ள17 வார்டுகளில் மதிமுக 8 வார்டுகளிலும், திமுக 6 வார்டுகளிலும், காங்கிரஸ் 1 வார்டிலும், மற்றவை 2 வார்டுகளிலும் வெற்றி பெற்றன. ஒன்றியக்குழு தலைவர் பதவியை திமுக ஆதரவுடன் மதிமுக கைப்பற்ற வாய்ப்பு உள்ளது. வார்டு 1- முத்துசாமி (திமுக), 2- அருள்குமார் (மதிமுக ), 3-சங்கீதா (மதிமுக), 4- சித்ரா (மதிமுக), 5 - கனகேஸ்வரி (மதிமுக), 6- மனோகரன் (திமுக),7- கனகராஜ் (திமுக), 8- கிருஷ்ணம்மாள் என்ற சுகுணா (மதிமுக), 9- க.விஜயலெட்சுமி (மதிமுக), 10- கணேசன் (திமுக), 11- மணிமாலா (சுயேச்சை), 12- த.விஜயலெட்சுமி (மதிமுக), 13- முருகேஸ்வரி (காங்கிரஸ்), 14- வீரலெட்சுமி (மதிமுக), 15- செல்வி (திமுக), 16- முத்துலெட்சுமி (திமுக), வார்டு 17- ராமலெட்சுமி (அமமுக).

சங்கரன்கோவில் ஒன்றியம்: சங்கரன்கோவில் ஒன்றியத்தில் மொத்தம் உள்ள 17 வார்டுகளில் 12 வார்டுகளில் திமுக வெற்றி பெற்றது. காங்கிரஸ், மதிமுக, அதிமுக தலா 1 வார்டிலும், மற்றவை 2 வார்டுகளிலும் வெற்றி பெற்றன. இதனால், சங்கரன்கோவில் ஒன்றியக்குழு தலைவர் பதவியை திமுக கைப்பற்றுகிறது.

வார்டு 1- சமுத்திரம் (திமுக), 2 -தங்கச்செல்வி (மதிமுக), 3-முத்துமாரி (திமுக), 4-சண்முகசுந்தரி (திமுக), 5-அமுதா (சுயேச்சை), 6- பார்வதி (திமுக),7- தமிழ்செல்வி (திமுக), 8- மேனகாசாந்தி (காங்கிரஸ்), 9- செல்வி (திமுக), 10- பரமகுரு (திமுக), 11- ராமலெட்சுமி (திமுக), 12- சங்கரபாண்டியன் (திமுக), 13-முனியம்மாள் (திமுக), 14- பழனிச்சாமி (அதிமுக), 15- ராமர் (திமுக), 16- கணேச புஷ்பா (சுயேச்சை), வார்டு 17- வேலுத்தாய் (திமுக).

செங்கோட்டை ஒன்றியம்: செங்கோட்டை ஒன்றியத்தில் மொத்தம் உள்ள 5 வார்டுகளில் 4-ல் திமுக, 1-ல் காங்கிரஸ் வெற்றி பெற்றது. இதனால், செங்கோட்டை ஒன்றியக்குழு தலைவர் பதவியை திமுக கைப்பற்றுகிறது.

வார்டு 1- சுப்புராஜ் (திமுக), 2- திருமலைச்செல்வி (திமுக), 3- கன்னிமுத்து (காங்கிரஸ்), 4- வள்ளியம்மாள் (திமுக), வார்டு 5- கலா (திமுக).

தென்காசி ஒன்றியம்: தென்காசி ஒன்றியத்தில் உள்ள 9 வார்டுகளில் 8-ல் திமுகவும், ஒரு வார்டில் அதிமுகவும் வெற்றி பெற்றது. இதனால், தென்காசி ஒன்றியக்குழு தலைவர் பதவியையும் திமுக கைப்பற்றுகிறது.

வார்டு 1- கலாநிதி (திமுக), 2- பிரியா (அதிமுக), 3- அழகுசுந்தரம் (திமுக), 4- ஷேக்அப்துல்லா (திமுக), 5- செல்வவிநாயகம் (திமுக), 6- வினோதி (திமுக), 7- மல்லிகா (திமுக), 8- சுப்புலெட்சுமி (திமுக), வார்டு 9- கனகராஜ் முத்துபாண்டியன் (திமுக).

மேலநீலிதநல்லூர் ஒன்றியம்: மேலநீலிதநல்லூர் ஒன்றியத்தில்உள்ள 12 வார்டுகளில் திமுக 8 வார்டுகளிலும், மதிமுக 3 வார்டுகளிலும், மற்றவை 1 வார்டிலும் வெற்றி பெற்றன. மேலநீலிதநல்லூர் ஒன்றியக்குழு தலைவர் பதவியையும் திமுக கைப்பற்றுகிறது.

வார்டு 1- சுந்தரி (திமுக), 2-முருகன் (திமுக), 3 - முத்துமாரி (திமுக), 4 - கணேசன் (சுயேச்சை),5- அருள்சீலி (திமுக), 6- வேல்மயில் (திமுக), 7- பாரதிகண்ணன் (திமுக), 8- ராமலெட்சுமி (மதிமுக), 9- மாதவி (திமுக), 10- அமுதா (மதிமுக), 11- சுசிதா (மதிமுக), வார்டு 12- பிரேமா (திமுக).

வாசுதேவநல்லூர் ஒன்றியம்: வாசுதேவநல்லூர் ஒன்றியத்தில் உள்ள 13 வார்டுகளில் 9 வார்டுகளில் திமுக, 2 வார்டுகளில் அதிமுக,காங்கிரஸ், மற்றவை தலா 1 வார்டில் வெற்றி பெற்றுள்ளன. வாசுதேவநல்லூர் ஒன்றியக்குழு தலைவர் பதவியும் திமுக வசமாகிறது.

வார்டு 1- பாண்டியம்மாள் (அதிமுக), 2- கனகராஜ் (அதிமுக),3- முனியராஜ் (திமுக), 4- செல்வி (திமுக), 5- சரஸ்வதி (திமுக), 6- முத்தையா பாண்டியன் (திமுக), 7- ஜெயராம் (திமுக), 8- அருணாதேவி (திமுக), 9- விமலா (திமுக), 10- மகாலெட்சுமி (காங்கிரஸ்), 11- விஜயபாண்டியன் (அமமுக), 12- லில்லி புஷ்பம் (திமுக), வார்டு 13- சந்திரமோகன் (திமுக).

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x