Published : 11 Oct 2021 03:13 AM
Last Updated : 11 Oct 2021 03:13 AM

முதுகுளத்தூர் அருகே மூளைச்சாவு அடைந்த : மாணவரின் உடல் உறுப்புகள் தானம் :

கவின்

முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் அருகே துலுக்கன்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த முத்துக்கருங்கு மகன் கவின்(20). இவர் மதுரையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். கடந்த 6-ம் தேதி விளங்குளத்தூரில் உள்ள பாட்டி வீட்டுக்குச் சென்றுவிட்டு, தனது ஊருக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது முதுகுளத்தூர் அருகே உள்ள தனியார் கல்லூரி எதிரே வேகத்தடையில் நிலை தடுமாறி விழுந்ததில் கவின் படுகாயமடைந்தார். தீவிர சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கவின் நேற்று முன்தினம் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவி

கல்லூரியில் படித்தபோது உடல் உறுப்பு தானம் செய்ய விருப்பம் தெரிவித்து கவின் பதிவு செய்திருந்தார். அதனையடுத்து அவரது கண், சிறுநீரகம் உள்ளிட்ட உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x