Published : 07 Oct 2021 03:14 AM
Last Updated : 07 Oct 2021 03:14 AM

சிற்சில சம்பவங்களைத் தவிர்த்து அமைதியாக நடந்தது ஊரக உள்ளாட்சி முதற்கட்டத் தேர்தல் - விழுப்புரத்தில் 80%, கள்ளக்குறிச்சியில் 72% வாக்குப்பதிவு :

விழுப்புரம் அருகே சிந்தாமணியில் குடைபிடித்துகொண்டு வாக்களிக்க வந்த மூதாட்டி. அடுத்தபடம்: விழுப்புரம் அருகே மதுரப்பாக்கம் கிராமத்தில் ஆர்வவத்துடன் வாக்களிக்க குவிந்த வாக்காளர்கள்.கடைசி படம்: செம்மனந்தல் வாக்குச்சாவடியில் ஆய்வு செய்யும் கள்ளக்குறிச்சி ஆட்சியர் பி.என்.தர்.

விழுப்புரம்/கள்ளக்குறிச்சி

விழுப்புரம் மாவட்டத்தில் மந்தமாக தொடங்கிய வாக்குப்பதிவு பின்னர் விறுவிறுப்பாகி 80% பதிவாகியுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் முதற்கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 7 ஊராட்சி ஒன்றியங் களுக்குட்பட்ட 16 மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள், 158 ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள், 372 ஊராட்சித் தலைவர்கள், 2,751 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் என 3,297 பதவியிடங்களுக்கான வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்கு தொடங்கிமாலை 6 மணிவரை 1,569 ஓட்டுச்சாவடி மையங்களில் நடைபெற்றது. தேர்தல் பணியில் அரசு அலுவலர்கள், ஊழியர்கள், ஆசிரியர்கள் என சுமார் 15 ஆயிரம் பேர் ஈடுபட்டனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் தொடங்கி நேற்றுகாலைவரை மழை பெய்ததாலும்,சில கிராமங்களில் மின் தடை ஏற்பட்டதாலும் நேற்று காலைசில வாக்குசாவடி மையங்களில் வாக்குப்பதிவு தாமதமாக தொடங்கியது. 8 மணிக்கு பிறகு மழைநின்றதால் வாக்காளர்கள் ஆர்வமாக வாக்களிக்க வந்தனர். இதையடுத்து வாக்குப்பதிவு விறு,விறுப்பாக நடந்தது.

​விக்கிரவாண்டி ஒன்றியம் தொரவி கிராமத்தில் கூடுதல் வாக்குச்சாவடி மையம் அமைக்கக்கோரி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து நேற்று மாலை 6 மணிக்கு வரிசையில் நின்ற வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்றது.

​திருவெண்ணைநல்லூர் ஒன்றியத்திற்குட்பட்ட தென்மங்கலம், கண்டமங்கலம் ஒன்றியம் மிட்டா மண்டகப்பட்டு கிராமங்களில் இருதரப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் போலீஸார் சமாதானப்பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். செஞ்சி அருகே ஒதியத்தூர் கிராமத்தில் வாக்குச்சாவடி அருகே வாக்காளர்களிடம் வாக்கு கேட்டவர்களை போலீஸார் விரட்டி அடித்தனர். சில வாக்குசாவடிகளில் வாக்குப்பதிவு இரவு 7.30 வரை நடைபெற்றது. சராசரியாக 7 ஒன்றியங்களில் 80 சதவீத வாக்குப்பதிவு இருக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் நேற்று 72 சதவீதம் வாக்குப் பதிவு நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முதற்கட்டமாக திருக்கோவிலூர், திருநாவலூர், உளுந்தூர்பேட்டை மற்றும் ரிஷிவந்தியம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் 10 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 89 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 217 ஊராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் 1,608 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. காலையிலேயே அமைதியாக வாக்குச்சாவடி மையங்களுக்கு வந்த பொதுமக்கள் வரிசையில் நின்று வாக்களித்தனர்.

மாவட்ட தேர்தல் பார்வையாளர் கே.விவேகானந்தன்,மாவட்டத் தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்டஆட்சியருமான பி.என்.தர் ஆகியோர் நேற்று வாக்குச்சாவடி மையங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர் ஆட்சியர் கூறியது: உளுந்தூர்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, எலவனாசூர் கோட்டை ஊராட்சி ஒன்றிய தொடக் கப்பள்ளி வாக்கு சாவடி மைய எண் 164 மற்றும் 165, திருநாவலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட செம்மனந்தல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வாக்கு சாவடிமைய எண் 32, 33 மற்றும் 34 -ம்திருக்கோவிலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தி.அத்திப்பாக்கம் புனித மிக்கேல்ஆர்.சி தொடக் கப்பள்ளி வாக்கு சாவடி மைய எண் 2, 3, 4, மற்றும் 5-ம் மற்றும் ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, வானாபுரம் ஊராட்சி ஒன்றிய பள்ளி வாக்கு சாவடி மைய எண் 105 மற்றம் 106-ல் பாதுகாப்புப்பணிகள், முன்னெச்சரிக்கை நடவடிக் கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. வாக்குப் பதிவிற்கு தேவையான அனைத்து முன்னேற்பாடு பணி களும், பாதுகாப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டதால் முதற்கட்ட வாக்குப்பதிவு அமைதியா கவும், சுமூகமாகவும் நடைபெற்றது என்றார்.

மாவட்ட தேர்தல் பொது பார்வையாளர் விவேகானந்தன் கூறியது:

திருநாவலூர் ஊராட்சி ஒன்றியத் திற்குட்பட்ட மாரனோடை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, உளுந்தூர்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, அ.குமார மங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆகிய இடங்க ளில் வாக்குப்பதிவு நடைபெறுவது தொடர்பாக வாக்குப்பதிவு தலைமை அலுவலர், வாக்குப்பதிவு அலுவலர் மற்றும் தேர்தல் முகவர் களிடம் கேட்டறியப்பட்டது. தொடர்ந்து உளுந்தூர்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில், உளுந்தூர்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட உள்ளாட்சி பதவிடங்களுக்கு, வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள மையத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. வாக்குப் பெட்டிகள் வைக்கப்படவுள்ள பாதுகாப்பு அறைகளின் கண்காணிப்பு பணிகள் குறித்தும் ஆய்வுமேற்கொள்ளப்பட்டது என்றார்.

திருக்கோவிலூர், திருநாவலூர், ரிஷிவந்தியம் மற்றம் உளுந்தூர்பேட்டை தேர்தல் நடத்தும் அலுவலர்கள், வட்டார தேர்தல் பார்வையாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x