Published : 07 Oct 2021 03:14 AM
Last Updated : 07 Oct 2021 03:14 AM

ஆண்டிபட்டியில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்டுவது எப்போது? : தேனி ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு

மதுரை

ஆண்டிபட்டியில் ஒருங்கிணைந்த நீதிமன்றக் கட்டிடத்துக்கான கட்டுமானப் பணியை உடனே தொடங்கக் கோரிய வழக்கில், தேனி ஆட்சியர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

தேனி ஆண்டிபட்டியைச் சேர்ந்த ராஜன், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:

ஆண்டிபட்டியில் மாவட்ட முன்சீப் நீதிமன்றம், குற்றவியல் நீதிமன்றம் ஆகியன தனியார் மருத்துவமனை தரைத்தளத்தில் வாடகைக்கு இயங்கி வருகிறது. இங்கு நூலகம், வழக்கறிஞர் அறை, கழிவறை வசதிகள் இல்லை. நீதிமன்றத்தைக் காலி செய்யுமாறு கட்டிட உரிமையாளர் பலமுறை தெரிவித்துவிட்டார்.

இதற்கிடையே, ஒருங்கி ணைந்த நீதிமன்றக் கட்டிடம் கட்ட ஆண்டிபட்டியில் 2 ஏக்கர் நிலம் 2004-ல் ஒதுக்கப் பட்டது. ஆனால், அந்த இடத்தில் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படவில்லை.

இந்நிலையில் அந்த இடத்தில் வேறு கட்டிடம் கட்டுவதற்கு ஆண்டிபட்டி பேரூராட்சி முடிவு செய்துள்ளது. எனவே, ஆண்டி பட்டியில் ஒருங்கிணைந்த நீதி மன்றம் கட்டுவதற்கு ஒதுக்கப் பட்ட இடத்தில் விரைவில் கட்டுமானப் பணியைத் தொடங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதிகள் எம்.துரைசுவாமி, கே.முரளிசங்கர் அமர்வு விசாரித்து, மனு தொடர் பாக தேனி ஆட்சியர், ஆண்டிபட்டி பேரூராட்சி செயல் அலுவலர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x