Published : 06 Oct 2021 03:13 AM
Last Updated : 06 Oct 2021 03:13 AM

வீடியோ சர்ச்சையில் சிக்கிய காவல் அதிகாரி : மதுரை காவல் ஆணையர் விளக்கம் கேட்டு உத்தரவு

மதுரை

மதுரையில் சர்ச்சைக்குரிய வீடியோவில் சிக்கிய காவல் துணை ஆணையரிடம் உரிய விளக்கம் கேட்டு காவல் ஆணையர் பிரேமானந்த் சின்கா உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

காவல்துறை அதிகாரி ஒருவர் உடல் முழுவதும் எண்ணெய் தேய்த்துக் கொண்டு உள்ளாடையுடன் அமர்ந்திருக்க, இளைஞர் ஒருவர் புல்லாங்குழல் வாசிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இது தொடர்பாக காவல் ஆணையர் விசாரிக்க உத்தரவிட்டார். இதில் அவர் மதுரை ஆயுதப் படை காவல் துணை ஆணையர் சோமசுந்தரம் எனத் தெரியவந்தது.

இதுதொடர்பாக காவல் ஆணையர் உத்தர வின்படி சம்பந்தப்பட்ட காவல் துணை ஆணையர், புல்லாங்குழல் வாசித்த காவலர் ஆகியோரிடம் உரிய விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக டிஜிபிக்கு அறிக்கை சமர்ப்பிக் கப்படும் எனக் கூறப்படுகிறது.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் விசாரித்தபோது, அவர்கள் கூறியதாவது: துணை ஆணையர் சோமசுந்தரம் மதுரை ஆயுதப்படையில் எஸ்ஐயாக பணியில் சேர்ந்து, பதவி உயர்வு மூலம் துணை ஆணையராகி உள்ளார். ஓரிரு மாவட்டங்களுக்கு பணியிட மாறுதலில் சென்றாலும், மதுரையில் அதிக நாட்கள் பணியாற்றி உள்ளார். ஏற்கெனவே அவர், அரைகுறை ஆடையுடன் டிக்-டாக் வீடியோ ஒன்றை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கி இருக் கிறார்.

அவர் போலீஸ்காரரின் திறமையை பாராட்டும் விதமாக புல்லாங்குழல் வாசிக்க வைத்ததில் தவறில்லை என்றாலும், அவர் அரைகுறை ஆடையுடன் அமர்ந்திருந்தது காவல்துறையின் மதிப்பை பாதிப்பதாக உள்ளது. தங்கள் ஆர்டலியாக இருக்கும் காவலர்களை உயர் அதிகாரிகள் எப்படி நடத்துகின்றனர் என்பதை, இச்செயல் படம் பிடித்து காட்டுகிறது.

காவல்துறை உயர் அதிகாரிகளின் வீடுகளில் ஆர்டலி முறையில் ஏற்கெனவே பிரச்சினை இருப்பதால் ஆர்டலி முறையையே நிரந்தரமாக நிறுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x