Published : 06 Oct 2021 03:13 AM
Last Updated : 06 Oct 2021 03:13 AM
மதுரை பெருநகர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வைப் பொறியாளர் சி. வெண்ணிலா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப் பதாவது:
பொதுமக்களிடம் இருந்து பெறும் புகார்களை ஒருங் கிணைக்கும் மையமாக 24 மணி நேரமும் செயல்படும் ‘மின்னகம்’ என்ற மின் நுகர்வோர் சேவை மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் சில மாதங்களுக்கு முன்பு தொடங்கி வைத்தார்.
இதன்படி, மின்நுகர்வோர் சேவை மொபைல் போன் எண் 94987-94987-ல் பெறப்படும் புகார்களை சென்னை மின்னகம் தலைமை அலுவலகத்தில் பெற்று சம்பந்தப்பட்ட மின் பகிர்மான வட்டங்களுக்கு கணினி மூலம் அனுப்பப்படுகிறது. இப்புகார்களை மின் பகிர்மான வட்ட அளவில் 24 மணி நேரமும் செயல்படும் மின்னகத்தில் இருந்து சம்பந்தப்பட்ட உதவிப் பொறியாளருக்கும், பல்வேறு உயர் அதிகாரிகளின் வாட்ஸ்-ஆப் குழுவுக்கும் அனுப்பப்படுகின்றன.
எந்த வகையான புகார் எனக் கள ஆய்வு செய்து உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தீர்வுக்குப் பிறகு சம்பந்தப்பட்ட பிரிவு பொறியாளர், வட்ட அளவில் செயல்படும் மின்னகத்துக்கு வாட்ஸ்-ஆப் மூலம் எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றி விளக்கமாக தகவலும் தெரிவிக்கப்படுகிறது. நடவடிக்கை குறித்து சம்பந்தப்பட்ட நுகர்வோரிடமே வட்ட அளவில் செயல்படும் மின்னகம் உறுதி செய்த பின், புகார்கள் முடித்து வைக்கப்படுகின்றன.
மின்னகம் மூலம் பெறும் புகார்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டு அனைத்து தரப்பு அலுவலர் களாலும் கண்காணிக்கப்படுகிறது. மின்சாரம் தொடர்பான புகார் களுக்கும், உதவிக்கும் மின்னகம்- மின் நுகர்வோர் சேவை எண்ணை (94987-94987) தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் குறிப்பிடப் பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT