Published : 03 Oct 2021 03:12 AM
Last Updated : 03 Oct 2021 03:12 AM
செவித்திறன் குறைந்த பொதுமக்கள் பின்னால் வாகனம் வருவதை அறிந்துகொள்ள உதவும் வகையில் அதிர்வலைகளை எழுப்பும் கருவியை அருப்புக்கோட் டையைச் சேர்ந்த அரசு உதவி பெறும் பள்ளி மாணவிகள் வடிவமைத்துள்ளனர்.
செவித்திறன் குறைந்தோர் இருசக்கர வாகனங்களை ஓட்டிச்செல்லும் போது, பின்னால் வரும் வாகனம் ஒலி எழுப்புவதை அறிய மாட்டார்கள். இதனால் சிலர் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. இதைத் தடுக்கும் வகையில், பின்னால் வாகனம் வருவதை உணர்த்த அதிர்வலைகளை எழுப்பும் சென்சார் கருவியை, அருப்புக்கோட்டையைச் சேர்ந்த அரசு உதவி பெறும் பள்ளி பிளஸ் 1 மாணவிகள் ரம்யா, ஐஸ்வர்ய லட்சுமி, மதுமிதா ஆகியோர் உருவாக்கி உள்ளனர்.
தாங்கள் உருவாக்கிய கருவி யின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாத ரெட்டியிடம் விளக்கி பாராட்டு பெற்றனர்.
இதுபற்றி இம்மாணவியர் கூறியதாவது: அல்ட்ரா சோனிக் சென்சார்கள், ஆர்டி னோ போர்டுகள் மற்றும் வைப்ரேட் டர்களை பயன்படுத்தி, ரூ.1,200 செலவில் எளிய முறையில் இந்தக் கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது.
இருசக்கர வாகனத்தின் பின்னால் பொருத்தப்படும் சென் சார்கள் வலது, இடது பக்கம் வாகனங்கள் வருவதை உணர்ந்து ஆர்டினோ போர்டுகள் மூலம் வாகனத்தின் கைப்பிடிகளில் பொருத்தப்பட்டிருக்கும் வைப்ரேட்டருக்கு சிக்னல்களை அனுப்புகிறது. இதனால் வைப் ரேட்டர் அதிரும்போது பின்னால் வாகனங்கள் வருவதை வாகன ஓட்டிகள் எளிதாக உணரலாம்.
இக்கருவி இருசக்கர வாகனத் தில் செல்லும் செவித்திறன் குறைபாடு உடையவர்களுக்கு மிகுந்த உதவியாக இருக்கும். வருங்காலத்தில் இதனை மேம்படுத்தி வாகன உற்பத்தி நிறுவனங்களுடன் இணைந்து தயாரிக்க முயற்சி மேற்கொள்ள உள்ளதாகத் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT