Published : 03 Oct 2021 03:13 AM
Last Updated : 03 Oct 2021 03:13 AM
புதுச்சேரி மாநிலத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டும், பள்ளி வாகனங் களை இயக்க அனுமதியளிக்கப் படாததால், பெற்றோர்கள், மாண வர்கள் கடும் அவதிக்குள்ளாகியுள் ளனர்.
கரோனா பரவல் காரணமாக கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டி ருந்தன. நாளடைவில் கரோனா தொற்று பரவல் குறைந்ததால், பெற்றோர்கள், வல்லுநர்களின் கருத்துகளை கேட்டறிந்து 9 முதல் 12 -ம் வகுப்பு வரையில் பள்ளிகள், கல்லூரிகளை திறக்க புதுச்சேரி அரசு உத்தரவிட்டிருந்தது.
அதன்படி, காரைக்கால் மாவட் டத்தில் 18 அரசு உயர்நிலைப் பள்ளிகள், 10 மேல்நிலைப் பள்ளிகள், அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் 21 உயர்நிலைப் பள்ளிகள், 23 மேல் நிலைப் பள்ளிகள் செப்.1-ம் தேதி முதல் திறக்கப்பட்டன. பள்ளிகள் திறக்கப்பட்டதிலிருந்து மாணவர் கள் உற்சாகத்துடன் பள்ளிகளுக்கு சென்று வருகின்றனர்.
ஆனால், பள்ளி வாகனங்களை இயக்க அரசு இதுவரை அனுமதி யளிக்காததால் பெற்றோர்கள், மாணவர்கள் பெரும் அவதிக்குள் ளாகியுள்ளனர்.
இதுகுறித்து வரிச்சிக்குடி பகுதி யைச் சேர்ந்த ஒரு மாணவரின் தந்தை ஏ.ராஜேந்திரன் ‘இந்து தமிழ்' நாளிதழிடம் கூறியது:
கரோனா பொதுமுடக்க தளர்வுகளின் அடிப்படையில் பேருந்துகள் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்துகள் பெருமளவில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளி வாகனங்களை இயக்க மட்டும் அரசு அனுமதி மறுத்து வருவது முரண்பாடாக உள்ளது. காரைக்காலில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக அரசு சார்பில் இயக்கப்படும் ரூ.1 கட்டணப் பேருந்தும் இயக்கப்படவில்லை. பெற்றோர்கள் பலர் பள்ளி வாகனங்களை மட்டும் நம்பியே வெகுதூரத்தில் உள்ள பள்ளிகள் பலவற்றில் தங்கள் பிள்ளைகளை சேர்த்துள்ளனர். சில பள்ளிகள் அமைந்துள்ள இடங்களில் பொதுப் போக்குவரத்து வசதி கிடையாது.
கரோனா பரவல் சூழலில் வேலைவாய்ப்பின்றி வருவாய் இழந்த பெற்றோர்கள் பலர், இப் போதுதான் வேலைக்கு செல்லத் தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில் பிள்ளைகளை பள்ளிகளுக்கு கொண்டுவிட்டு, அழைத்து வரவேண்டியிருப்பதால் பெற்றோர்களால் வேலைக்கு செல்லமுடியவில்லை. தனியார் ஆட்டோக்களை பயன்படுத்தலாம் என்றால், அது பொருளாதார ரீதியாக சிரமம் அளிக்கிறது. அதனால் வகுப்பறையில் தனி மனித இடைவெளி பின்பற்றப்படுவது போலவே வாகனங்களிலும் பின்பற்ற அறிவுறுத்தி, பள்ளி வாகனங்களை இயக்க அனுமதி யளிக்க வேண்டும்.
பள்ளிக் கல்வியை பொறுத்த அளவில் புதுச்சேரி அரசு தமிழகத்தை பின்பற்றியே முடிவுகள் எடுத்து வருகிறது. எனவே, தமிழகத்தில் பள்ளிப் பேருந்துகள் இயக்கப்படுவது போல, புதுச்சேரியிலும் பள்ளிப் பேருந்துகளை இயக்க வேண்டும் என்றார்.
ஆசிரியர்கள் பற்றாக்குறை
ஆசிரியர்கள் தரப்பில் கூறியது:நீண்ட இடைவெளிக்குப் பின்னர் திறக்கப்பட்டதால், பள்ளிகளுக்கு ஆர்வத்துடன் மாணவர்கள் வரு கின்றனர். ஆனால், மாணவர் களுக்கான பேருந்துகள் இயக்கப் படவில்லை. புத்தகங்கள், சீருடைகள் கொடுக்கப்படவில்லை. ஏற்கெனவே ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ள நிலையில், தற்போது பள்ளிகளில் பாடம் எடுக்கக் கூடிய ஆசிரியர்கள் பலரை உள்ளாட்சித் தேர்தல் பணிகளுக்கு ஈடுபடுத்துகின்றனர். இதனால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது என்றனர்.
முதன்மைக் கல்வி அலுவலர் ஏ.ராஜசேகரன் கூறும்போது, “பள்ளி வாகனங்களை இயக்க அரசு அனுமதியளிக்கவில்லை. இதுகுறித்து அரசுதான் முடி வெடுக்க முடியும்.
பாடப்புத்தகங்கள் வழங்கும் பணி தொடங்கப்பட்டுவிட்டது. ஒரு வாரத்துக்குள் அனைத்து வகுப்புகளுக்கும் பாடப் புத்த கங்கள் வழங்கப்பட்டு விடும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT