Published : 22 Sep 2021 03:07 AM
Last Updated : 22 Sep 2021 03:07 AM

உள்ளாட்சி இடைத்தேர்தல்: திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆலோசனை :

திருவாரூர்

திருவாரூர் மாவட்ட ஊராட்சி 11-வது வார்டு மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிக்கு அக்.9-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த வார்டில் வடபாதிமங்கலம், பழையனூர், சவளக்காரம், உட்பட 22 ஊராட்சி கள் இடம் பெற்றுள்ளன.

2019-ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலில் இந்த வார்டில் போட்டி யிட திமுக கூட்டணி சார்பில் மன்னார்குடி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் வீரமணி வேட்பு மனு தாக்கல் செய்தார். அதிமுக சார்பில் மகாலிங்கம் என்பவர் வேட்பு மனு தாக்கல் செய்தார். தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு முதல்நாள் மகாலிங்கம் உயிரிழந்தார். இத னால், இந்த வார்டுக்கு தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

இதையடுத்து, அக்.9-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

இந்நிலையில் நேற்று மன்னார்குடி அசோகா திருமண அரங்கில், 11-வது வார்டு மாவட்ட கவுன்சிலர் தேர்தல் மற்றும் மூவாநல்லூர் ஊராட்சித் தலை வர் இடைத்தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடத்தப் பட்டது. இதில் 22 ஊராட்சிகளை சேர்ந்த திமுக கிளை செயலா ளர்கள், ஊராட்சித் தலைவர்கள் பங்கேற்றனர். திருவாரூர் மாவட்ட திமுக செயலாளர் பூண்டி கலை வாணன் எம்எல்ஏ, மாவட்ட ஊராட் சித் தலைவர் தலையாமங்கலம் பாலு, மாநில செயற்குழு உறுப் பினர் ஞானசேகரன், திமுக ஒன்றி யச் செயலாளர்கள் தன்ராஜ், கும ரேசன் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த இடைத்தேர்தலில் திமுக வெற்றிபெற பிரகாசமான வாய்ப்புள்ளதால், தேர்தல் நடை பெறும் வார்டுகளை கூட்டணி கட்சிகளுக்கு விட்டுக் கொடுக் காமல் திமுக சார்பில் வேட்பாளரை நிறுத்த வேண்டுமென கிளைச் செயலாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதுதொடர்பாக திமுக தலைமைக்கு தெரியப் படுத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நேற்று குமாரசாமி திருமண அரங்கில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், எம்எல்ஏ மாரிமுத்து, முன்னாள் எம்எல்ஏ கோ.பழனிச்சாமி, நாகை எம்.பி எம்.செல்வராஜ், மாவட்டச் செயலாளர் வை.சிவபுண்ணியம், மாநிலக்குழு உறுப்பினர் செல்வராஜ், ஒன்றியச் செயலாளர் வீரமணி மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்தில், ஏற்கெனவே செய்த ஒதுக்கீடு அடிப்படையில் 11-வது வார்டை இந்திய கம்யூனிஸ்ட்டுக்கு ஒதுக்கித்தர திமுக தலைமையை வலியுறுத்துவது என முடிவு எடுக்கப்பட்டது.

உள்ளாட்சி இடைத்தேர்தலுக் கான வேட்புமனு தாக்கல் செய்ய இன்று (செப்.22) கடைசி நாளாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x