விநாயகர், பெரியகருப்பு சுவாமி கோயிலில் கும்பாபிஷேக விழா :

விநாயகர், பெரியகருப்பு சுவாமி கோயிலில் கும்பாபிஷேக விழா :

Published on

பெரம்பலூர் மாவட்டம் கோனேரிபாளையம் விநாயகர் மற்றும் பெரியகருப்பு சுவாமி கோயில் கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை மங்கள இசை, விநாயகர் வழிபாடு, புண்ணியாக வாசனம், வாஸ்து சாந்தி, பூர்ணாஹூதி, தீபாராதனை, காப்பு கட்டுதல், கும்ப அலங்காரம், யாகசாலை பிரவேசம், முதல்கால யாக பூஜை ஆகியவை நடைபெற்றன.

தொடர்ந்து, நேற்று காலை 7.30 மணிக்கு மங்கள இசை, விநாயகர் வழிபாடு, புண்ணியாக வாசனம், பிம்பசுத்தி, நாடி சந்தானம், திரவிய ஹோமம், பூர்ணாஹூதி, தீபாராதனை, யாத்ரா தானம், கடம் புறப்பாடு நடைபெற்றன. பின்னர், காலை 10 மணியளவில் கோயிலின் அனைத்து விமானங்களிலும், மூலவருக்கும் புனிதநீர் ஊற்றப்பட்டு, கும்பாபிஷேகம் நடைபெற்றது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in