Published : 22 Aug 2021 03:14 AM
Last Updated : 22 Aug 2021 03:14 AM
மதுரை வண்டியூர் கண்மாயில் மழைநீரை சேகரிக்க பொதுப் பணித் துறை ஆர்வம் காட்டா ததால் கண்மாய் முழுவதும் மண் மேடாகி ஆகாயத்தாமரைகள் வளர்ந்துள்ளன. இதனால் தண் ணீரை தேக்கி வைக்க முடியாமல், மறுகால் பாய்ந்து வைகை ஆற்றில் வீணாக கலக்கிறது.
கடந்த அரை நூற்றாண்டுக்கு முன்பு வரை கண்மாய்கள் நிறைந்த பகுதியாக மதுரை திகழ்ந்தது. காலப்போக்கில் நகர் விரிவாக்கம், அரசு கட்டிடங்கள் கட்டுவதற்கு என பல நீர்நிலைகள் இருந்த தடம் தெரியாமல் மாறிவிட்டன. எஞ்சியுள்ள கண்மாய்களை பாதுகாக்க சமூக ஆர்வலர்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.
550 ஏக்கர் பரப்பளவிலான மதுரை வண்டியூர் கண்மாய்க்கு மழைக்காலங்களில் சாத்தையாறு அணை முதல் பல்வேறு கிளை கால்வாய்கள் வழியாக தண் ணீர் பெருக்கெடுத்து வரும். இந்நிலையில் கண்மாயை ஆழப் படுத்தி பராமரிக்காததால் மண் மேடாகிவிட்டது. இதனால் தண் ணீரை முழு அளவில் கண்மாயில் தேக்கி வைக்க முடியாமல் மறுகால் பாய்ந்து வைகை ஆற்றில் கலக்கிறது. மேலும், கண்மாய் நீருடன் கழிவுநீர் கலந்திருப்பதால் ஆகாயத்தாமரை அதிக அளவில் வளர்ந்துள்ளது. போதிய அளவு தண்ணீரை தேக்கி வைக்க பொதுப்பணித் துறை அதிகாரிகள் முயற்சி செய்யாததால், கண் மாயை சுற்றியுள்ள பகுதிகளில் கோடை காலத்தில் நிலத்தடி நீர் மட்டம் அதலபாதாளத்துக்குச் சென்றுவிடுகிறது.
வீடுகளில் உள்ள ஆழ்துளை கிணறுகளில் போதிய தண்ணீர் இல்லாததால், மக்கள் லாரிகளில் தண்ணீரை விலைக்கு வாங்கும் நிலை ஏற்படுகிறது.
கண்மாய் உள்ளிட்ட நீர்நிலைகளை தூர்வாரி முறையாக பராமரித்தாலே நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து தண்ணீர் தேவையை ஓரளவு பூர்த்தி செய்து விட முடியும். ஆனால் இது தொடர்பாக பொதுப்பணித் துறை அதிகாரிகளும், உள்ளூர் மக்கள் பிரதிநிதிகளும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர். மறுபுறம் குடிநீர் திட்டங் களுக்கு பல ஆயிரம் கோடி ரூபாயை செலவு செய்கின்றனர்.
மாநகராட்சி நிர்வாகம், தனியார் பங்களிப்புடன் நகரில் உள்ள 15-க்கும் மேற்பட்ட கண்மாய்களை தூர்வாரி தண்ணீர் தேக்கும் திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளது. அந்த அடிப்படையில் வண்டியூர் கண்மாயையும் தூர்வாரி, மழைநீரை சேகரிக்க மதுரை ஆட்சியர் எஸ்.அனீஷ்சேகரும், மாநகராட்சி ஆணையாளர் கே.பி.கார்த்திகேயனும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.
இதுகுறித்து பொதுப்பணித் துறை அதிகாரி சுபாஷினியிடம் கேட்டபோது, "கண்மாய் நிரம்பி யதால்தான் தண்ணீர் மறுகால் பாய்கிறது. கண்மாயில் சுற்றியுள்ள தனியார் நிறுவனங்களிலிருந்து அதிக அளவு கழிவுநீர் வெளி யேற்றப்படுகிறது. இந்த கழிவுநீர் அனைத்தும் கண்மாய் நீரில் கலப்பதால் ஆகாயத் தாமரைகள் வளர்ந்துள்ளன. கழிவுநீர் கலப்பதைத் தடுக்க மாநகராட்சி யிடம் புகார் செய்துள்ளோம். அவர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்" என்று கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT