Published : 18 Aug 2021 03:14 AM
Last Updated : 18 Aug 2021 03:14 AM
கரூர் மாவட்டம் மண்மங்கலம் வட்டம் நெரூர் தென்பாகம் வேடிச்சிபாளையத்தில் மயானத்துக்கு பாதை வசதி கோரி நேற்று முன்தினம் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற வேலுச்சாமி(45) என்பவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
இதையடுத்து வேலுச்சாமியின் வீட்டுக்கு நேற்று சென்ற மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர், வேலுசாமியின் மனைவி மணிமேகலை, மகன்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.
பின்னர், மணிமேகலையிடம் ஈமச்சடங்கு நிதி உதவியாக ரூ.22,500, மாவட்ட ஆட்சியரின் தன் விருப்ப நிதியின் கீழ் ரூ.1 லட்சம், கணவனை இழந்த பெண்களுக்கான மாதாந்திர உதவித்தொகையாக ரூ.1,000 பெறுவதற்கான ஆணை மற்றும் ஆதரவற்றோர் விதவை சான்றிதழ் ஆகியவற்றை வழங்கினார். மேலும், வேலுச்சாமியின் 2 மகன்கள் கல்வி பயில தேவையான உதவிகள் செய்யப்படும் எனவும் ஆட்சியர் தெரிவித்தார். அப்போது, மாவட்ட வருவாய் அலுவலர் எம்.லியாகத் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT