Regional03
நூதன முறையில் பணம் பறிப்பு5 பேர் கைது :
ராமநாதபுரம் மாவட்டம் காரேந்தலைச் சேர்ந்த மாரியும்(25), இவரது நண்பர் ராஜாவும் இருதினங்களுக்கு முன்பு மோட்டார் சைக்கிளில் சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே சிவல்புஞ்சை வழியாகச் சென்றனர். அப்போது அவர்களை காளையார்கோவில் கிருஷ்ணா நகரைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (20), காளீஸ்வரன் (19), சிலையா ஊரணியைச் சேர்ந்த அஜித்குமார் (23), பிரசாந்த் (21) உள்ளிட்ட 5 பேர் வழிமறித்தனர்.
பிறகு அவர்களை தாக்கி மொபைலை பறித்துக் கொண்டு பணம் கேட்டனர். ஆனால் அவர்களிடம் பணம் இல்லை. பிறகு ‘கூகுள் பே’ மூலம் ரூ.8,500 பெற்றுக்கொண்டு, இருவரையும் விடுவித்தனர். இதுகுறித்து மாரி அளித்த புகாரில் காளையார்கோவில் போலீஸார் வழக்குப் பதிந்து ஐந்து பேரையும் கைது செய்தனர்.
