Published : 15 Aug 2021 03:26 AM
Last Updated : 15 Aug 2021 03:26 AM

ஒரு வாரத்துக்கு முன்பதிவு செய்து விட்டதால் - அரசு ராஜாஜி மருத்துவமனை தடுப்பூசி மையம் ‘ஹவுஸ்புல்’ :

மதுரை

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை தடுப்பூசி மையத்தில் தடுப்பூசி போட மக்கள் ஒரு வாரத்துக்கு முன்பதிவு செய்துவிட்டதால், புதிதாக யாரும் தடுப்பூசி போட பதிவு செய்ய முடியவில்லை.

மதுரை மாவட்டத்தில் இதுவரை 52,387 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது தினமும் 20 முதல் 30 பேர் வரை புதிதாக கரோனா தொற்றால் பாதிக்கப்படுகின்றனர்.

தொற்றாளர்கள் எண்ணிக்கை குறைந்ததால் அரசு மருத்துவ மனைகள், தற்காலிக கரோனா மையங்களில் நோயாளிகள் எண்ணிக்கை குறைந்தது.

ஆனாலும், தொற்றை முழுமை யாகத் தடுக்க முடியவில்லை. பொது இடங்களில் முகக் கவசம் அணியாமல் அலட்சியமாக பொது மக்கள் நடமாடுகின்றனர்.

விரைவில் கரோனா மூன்றாவது அலை வருவதாகக் கூறப்படுவதால் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சுகாதாரத்துறையினர் செய்து வருகின்றனர்.

மதுரை மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் இது வரை 8,89,269 பேர் கரோனா தடுப்பூசி போட்டுள்ளனர். தினமும் சராசரியாக 7 ஆயிரம் முதல் 8 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்படுகிறது. நேற்று ஒரே நாளில் 7,202 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.

ஆனால், தடுப்பூசி தொடர்ந்து பற்றாக்குறையாக விநியோகம் செய்யப்படுவதால் பொதுமக்கள் தடுப்பூசி போட முடியாமல் ஏமாற் றம் அடைந்துள்ளனர்.

மதுரை அரசு ராஜாஜி மருத்து வமனையில் மொத்தமே 350 தடுப் பூசிகள் மட்டுமே கையிருப்பு உள்ளன. அதே நேரத்தில், ஆரம்ப சுகாதாரநிலையங்களில் 25,600 தடுப்பூசிகள் உள்ளன.

ஆரம்ப சுகாதார நிலையங்க ளுக்கு அதிகமாகவும், அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு குறை வாகவும் தடுப்பூசி விநியோகம் செய்யப்படுவதே, இந்த பற்றாக் குறைக்கு காரணம் என்று கூறப் படுகிறது.

மாநகராட்சி பகுதிகளில் தடுப் பூசி போட விரும்புவோர் மாநகராட்சி இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும். இதில், ராஜாஜி மருத்துவமனை சார்பில் இளங்கோ பள்ளி தடுப்பூசி மையத்தில் தடுப்பூசி போட பதிவு செய்ய முயன்றால் அதில், ‘‘அடுத்த ஒரு வாரத்துக்கு தடுப்பூசி போடுவதற்கான ஒதுக் கீடு நிரம்பிவிட்டது, ’’ என்று தக வல் வருகிறது. அதனால், தடுப்பூசி போடவே பதிவு செய்ய முடியாமல மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

மாவட்ட நிர்வாகம், அரசு ராஜாஜி மருத்துவமனை, நகர்ப்புற ஆரம்ப சுகாதாரநிலையங்களுக்கு தடுப்பூசிகளை அதிகமாக விநி யோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x