Published : 14 Aug 2021 03:21 AM
Last Updated : 14 Aug 2021 03:21 AM
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சார்பில் புதூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வைத்து குழந்தைகள் பாதுகாப்புக் குழு கூட்டம் நடைபெற்றது.
ஒன்றியக்குழு தலைவர் சுசிலா தனஞ்செயன் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவபாலன், நவநீத கிருஷ்ணன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராமசாமி, பிரதீப் குமார் முன்னிலை வகித்தனர்.
இதில், குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு, குழந்தைகள் உரிமைகள், தத்தெடுப்பு, குழந்தைகளுக்கு எதிரான பிரச்சினைகள் குறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் பாதுகாப்பு அலுவலர் சுரேத்து வாணி பேசினார். கூட்டத்தில் குழு உறுப்பினர்கள் மருத்துவ அலுவலர் திருமால் முருகன், ஊராட்சி மன்ற தலைவர்கள் நாகராணி, சித்ரா மற்றும் சுயஉதவிக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT