Published : 14 Aug 2021 03:22 AM
Last Updated : 14 Aug 2021 03:22 AM

வேலூரில் நடைபெற்ற - விழிப்புணர்வு ஓட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு :

75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வேலூர் கோட்டையிலிருந்து விழிப்புணர்வு ஓட்டம் நேற்று நடைபெற்றது. இதனை, மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தொடங்கி வைத்து ஓட்டத்தில் பங்கேற்றார்.படம்: வி.எம்.மணிநாதன்.

வேலூர்

வேலூரில் உடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு ஓட்டத்தை மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தொடங்கி வைத்து பங்கேற்றார்.

வேலூர் மாவட்டத்தில் நேரு யுவகேந்திரா சார்பில் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு உடல் ஆரோக்கியம் குறித்த விழிப்பு ணர்வு ஓட்டம் நேற்று நடைபெற்றது. வேலூர் கோட்டை காந்தி சிலை முன்பு தொடங்கிய ஓட்டத்தை மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் கொடியசைத்து தொடங்கி வைத்ததுடன் அவரும் ஓட்டத்தில் பங்கேற்றார்.

காந்தி சிலையில் தொடங்கி வடக்கு காவல் நிலையம், பழைய மீன் மார்கெட் வழியாக திரும்பி மீண்டும் காந்தி சிலை முன்பாக முடிந்தது.

‘‘வேலூர் மாவட்டத்தில் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 75 கிராமங்களில் உடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு ஓட்டம் நடத்தப்படுகிறது. இதன் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. வரும் அக்டோபர் 2-ம் தேதிக்குள் 75 கிராமங்களில் விழிப்புணர்வு ஓட்டங்கள் நடத்தி முடிக்கப்படும். இதில், உடல் ஆரோக்கியம் குறித்து விழிப் புணர்வு ஏற்படுத்தப்படும்’’ என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக் கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x