Published : 03 Aug 2021 03:14 AM
Last Updated : 03 Aug 2021 03:14 AM
திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் ஆதார் சேவை மையத்தில், 15 வயதுக்கு மேற்பட்ட இரண்டு சிறுமிகள் தங்களது புகைப்படத்தை மாற்றுவதற்காக நேற்று விண்ணப்பித்துள்ளனர். இதற்காக இருவரிடம் சேர்த்து ரூ. 200 கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், தபால் நிலையங்களில் செயல்படும் ஆதார் மையங்களில் திருத்தம் செய்யும்போது, ரூ.50 மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால், ஆட்சியர் அலுவலக ஆதார் சேவை மையத்தில் ரூ.100 கட்டணம் பெறப்படுவதாக சிறுமிகள் புகார் தெரிவித்தனர்.
இந்நிலையில், அங்கு வந்த நாம் தமிழர் கட்சியின் கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறையின் ஈஸ்வரன் தலைமையிலான கட்சியினர், ஆதார் மையத்தை நேற்று முற்றுகையிட்டு, எதற்காக ரூ.100 கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்றும், ஒவ்வோர் ஆதார் மையத்துக்கும் ஒரு கட்டணமா என்றும் ஊழியர்களிடம் கேள்வி எழுப்பினர்.
இதையடுத்து காவல்துறையினர் அவர்களை சமரசம் செய்து அனுப்பிவைத்தனர். இதுதொடர்பாக ஆட்சியரிடம் புகார் அளிக்கப் போவதாகவும் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT