Published : 03 Aug 2021 03:14 AM
Last Updated : 03 Aug 2021 03:14 AM
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் சு.வினீத் நேற்று வெளியிட்ட அறிக்கையில், "முதல்வரின் மருத்துவக் காப்பீட்டு திட்டத்துக்காக, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காப்பீட்டு அட்டைகள் வழங்கும் அலுவலகம் செயல்படுகிறது. கரோனா தொற்று பாதிப்புகளுக்கு, காப்பீட்டு அட்டைகள் மூலமாக தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம் என்ற முதல்வரின் அறிவிப்பையடுத்து, காப்பீட்டு அட்டை கோரி ஆட்சியர் அலுவலகத்துக்கு வரும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
ஆட்சியர் அலுவலகத்தில் அதிகமாக கூடும் கூட்டத்தை தவிர்க்கும் வகையிலும், பொதுமக்களின் போக்குவரத்து சிரமங்களை குறைக்கும் வகையிலும், கூடுதலாக திருப்பூர் கோட்டாட்சியர் அலுவலகம், தாராபுரம் வட்டாட்சியர் அலுவலகம் ஆகிய இரண்டு இடங்களில், முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை வழங்கும் அலுவலகங்கள் புதிதாக ஏற்படுத்தப்பட்டு, இன்றுமுதல் (ஆக.3) செயல்பாட்டுக்கு வருகின்றன. எனவே, பொதுமக்கள் மருத்துவகாப்பீட்டு அட்டை பெற அருகே உள்ள அலுவலகங்களை பயன்படுத்திக் கொள்ளலாம். முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் உள்ளிட்ட கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை தவறாது கடைபிடிக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT