ஞாயிறு, நவம்பர் 24 2024
Last Updated : 02 Aug, 2021 03:16 AM
Published : 02 Aug 2021 03:16 AM Last Updated : 02 Aug 2021 03:16 AM
நேற்று முன்தினம் விருதுநகர் அருகே சூலக்கரையில் 2 வயது பெண் குழந்தை, 3 வயது ஆண் குழந்தை உட்பட 6 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதேபோல், சிவகாசி கங்காகுளத்தில் ஒருவரும், விருதுநகர் ராமமூர்த்தி சாலையில் ஐசிஏ காலனியில் ஒருவரும் உட்பட மொத்தம் 16 பேர் நேற்று முன்தினம் கரோனாவால் பாதிக்கப்பட்டனர். விருதுநகர் மாவட்டத்தில் இதுவரை 45,494 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 44,744 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 210 பேர் சிகிச்சைபெற்று வருகின்றனர். இதுவரை 540 பேர் உயிரிழந்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT