Published : 29 Jul 2021 03:13 AM
Last Updated : 29 Jul 2021 03:13 AM

விழுப்புரம் மாவட்டத்தில் - மீண்டும் தலைதூக்கும் பிளாஸ்டிக் பை பயன்பாடு :

திண்டிவனம் ராஜாகுளத்திற்கு வரும் வரத்து வாய்க்காலில் வீசி ஏறியப்பட்ட பாலித்தீன் கவர்கள்.

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் மீண்டும் பிளாஸ்டிக் பை பயன்பாடு அதிகரித்து வருகிறது.

தமிழக அரசு 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு 2019 ஜனவரி 1-ம் தேதி முதல் தடை விதித்தது. இதையடுத்து தடையை மீறி விற்பனை செய்யப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த தடை உத்தரவு அமலுக்கு வந்த நாளிலிருந்து கரோனா தொற்று பரவ ஆரம்பிக்கும்வரை பிளாஸ்டிக் பைகளை அதிக அளவில் பயன்படுத்த உள்ளாட்சி நிர்வாகம் அனுமதிக்கவில்லை.

அதன்பின் கரோனா தொற்றை கட்டுப்படுத்த அனைத்துத் துறை களும் முயற்சித்த வேளையில், மீண்டும் பாலித்தீன் கவர்களின் பயன்பாடால் மீண்டும் வழக்க மான நிலைக்கு மாவட்டம் வந்தது.

விழுப்புரம், திண்டிவனம் நகராட்சிகளில் உள்ள பெரிய ஹோட்டல்கள் முதல் கையேந்தி பவன்கள் வரை அனைத்து இடங்களிலும் பார்சல்கள் கட்ட பாலித்தீன் பைகளே பயன் படுத்துகின்றனர். இந்த கவர்கள் டோர் டெலிவரியும் செய்யப்படுகிறது. மேலும் மொத்த விற்பனை கடைகளிலும் கிடைக்கிறது.

பறிமுதல் செய்யப்படும் பாலித்தீன் கவர்களை உள்ளாட்சி நிர்வாகம் என்ன செய்தார்கள் என்பது இதுவரை யாருக்கும் தெரியவில்லை. பறிமுதல் செய்யப்படும் பாலித்தீன் கவர்கள் அழிக்கப்படுவதை உறுதி செய்யவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x