Published : 29 Jul 2021 03:14 AM
Last Updated : 29 Jul 2021 03:14 AM

திமுக அரசைக் கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் :

திருச்சி காட்டூர் சக்தி நகரில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அதிமுக தெற்கு மாவட்டச் செயலாளர் ப.குமார் உள்ளிட்டோர். (அடுத்த படம்) கரூர் அருகேயுள்ள ஆண்டாங்கோவில் மில்கேட் பகுதியில் நேற்று அதிமுக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர். (3-வது படம்) தஞ்சாவூர் ஆற்றுப் பாலத்தில் நேற்று துணை ஒருங்கிணைப்பாளர் ஆர்.வைத்திலிங்கம் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர். (கடைசி படம்) நாகை மாவட்டம் நாகூரை அடுத்த மேலவாஞ்சூர் பகுதியில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அதிமுகவினர்.

திருச்சி

தேர்தலின்போது அளித்த வாக்கு றுதிகளை திமுக அரசு நிறை வேற் றவில்லை என்று கூறி, அதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் நேற்று அதிமுகவினர் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர்.

அதிமுக திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம் சார்பில் காட்டூர் சக்தி நகரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலாளர் ப.குமார் தலைமை வகித்தார். பகுதிச் செயலாளர் தண்டபாணி, சிந்தாமணி கூட்டுறவு சங்கத் தலைவர் எஸ்.சகாதேவ் பாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல, காஜாமலை லூர்துசாமி பிள்ளை காலனியில் முன்னாள் எம்பியும், கட்சியின் அமைப்புச் செயலாளருமான டி.ரத்தினவேல், மாவட்ட துணைச் செயலாளர் அப்துல் அஜீஸ், திருச்சி புறநகர் வடக்கு மாவட்டம் சார்பில் தில்லைநகரில் உள்ள கட்சி அலுவலகம் அருகே மாவட்டச் செயலாளர் மு.பரஞ்ஜோதி தலைமையில் முன்னாள் அமைச் சர்கள் கு.ப.கிருஷ்ணன், எஸ்.வளர் மதி, மாநகர் மாவட்டம் சார்பில் தென்னூரில் உள்ள கட்சி அலுவ லகம் முன் மாநகர் மாவட்டச் செயலாளர் வெல்லமண்டி என்.நட ராஜன் தலைமையில் இளைஞரணி மாநில இணைச் செயலாளர் ஜெ.சீனிவாசன், மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் சீ.கார்த்தி கேயன் உள்ளிட்டோர் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். இதே போல, மாவட்டத்தில் மொத்தம் 84 இடங்களில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கரூர் மாவட்டத்தில்....

கரூர் கோவை சாலை மில் கேட்டில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்துக்கு முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமை வகித்தார். இதில் திரளானோர் கலந்து கொண்டனர். இதேபோல, கரூர் மாவட்டத்தில் 44 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பெரம்பலூர் மாவட்டத்தில்...

பெரம்பலூரில் மாவட்ட அதிமுக அலுவலகம் முன்பு மாவட்டச் செயலாளர் ஆர்.டி.ராமச்சந் திரன் தலைமையிலும், துறையூர் சாலையில் முன்னாள் எம்.பி., ஆர்.பி.மருதராஜா தலைமையிலும், எளம்பலூர் சாலையில் முன்னாள் எம்எல்ஏ தமிழ்ச்செல்வன் தலைமையிலும் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அரியலூர் மாவட்டத்தில்....

அரியலூரில் உள்ள தனது வீட்டின் முன்பு அதிமுக மாவட்டச் செயலாளர் தாமரை எஸ்.ராஜேந் திரன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், நகரச் செயலாளர் ஏ.பி.செந்தில், அவைத் தலைவர் கணேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதேபோல, மாவட்டத்தில் ஜெயங்கொண்டம், ஆண்டிடம், திருமானூர், செந்துறை, உடையார் பாளையம், தூத்தூர்,வெங்கனூர் உள்ளிட்ட பகுதிகளிலும் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டத்தில்...

புதுக்கோட்டை மாவட்டம் இலுப் பூரில் அதிமுக வடக்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச் சருமான சி.விஜயபாஸ்கர் எம்எல்ஏ தனது வீட்டின் அருகே ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டார். திருமயம் அருகே விராச்சிலையில் அதிமுக தெற்கு மாவட்ட செயலாளர் பி.கே.வைரமுத்து தனது வீட்டின் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். இதே போல, மாவட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.

தஞ்சாவூர் மாவட்டத்தில்...

தஞ்சாவூர் ஆற்றுப்பாலத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, கட்சியின் துணை ஒருங்கிணைப் பாளரும், முன்னாள் அமைச்சரு மான ஆர்.வைத்திலிங்கம் தலைமை வகித்தார். கட்சி நிர்வாகிகள் துரை.திருஞானம், அறிவு டைநம்பி, சாவித்ரி கோபால், சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்துக்கு பின்னர் ஆர்.வைத்திலிங்கம் செய்தியாளர் களிடம் கூறியது: திமுக ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதாக கூறியதை குறைக்க வேண்டும்.

அதிமுகவினர் மீது பொய் வழக்குப் போடுவதை நிறுத்த வேண்டும். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்.

மத்திய அரசு மேகேதாட்டுவில் அணை கட்டுவதை தடுத்து நிறுத்தாவிட்டால், மத்திய அரசை கண்டித்தும் அதிமுக சார்பில் ஆர்ப் பாட்டம் நடத்தப்படும் என்றார்.

இதேபோல, கும்பகோணம் காந்தி பூங்கா அருகில் அதிமுக நகரச் செயலாளர் ராம.ராமநாதன் தலைமையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பட்டுக்கோட்டை, திருவை யாறு, பாபாநாசம், ஒரத்தநாடு உள்ளிட்ட பகுதிகளிலும் நேற்று அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகை, மயிலாடுதுறை...

நாகை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அதிமுக அலுவலகம் முன் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏ வுமான ஓ.எஸ்.மணியன் தலைமை வகித்தார். நகரச் செயலாளர் தங்க.கதிரவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மேலவாஞ்சூர் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்துக்கு, முன்னாள் அமைச் சரும், மீனவரணி இணைச் செயலா ளருமான ஜெயபால் தலைமை வகித்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் கடைவீதியில் மாவட்ட அதிமுக செயலாளர் பவுன்ராஜ் தலைமையிலும், வழுவூரில் முன்னாள் மாவட்டச் செயலாளர் செந்தில்நாதன் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாகை, மயிலாடுதுறை மாவட் டங்களில் மொத்தம் 1,750 இடங் களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டத்தில்...

திருவாரூர் மாவட்டம் நன்னி லத்தில் அதிமுக மாவட்டச் செயலாளரும் எம்எல்ஏவுமான ஆர்.காமராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் அமைப்புச் செயலாளர் டாக்டர் கோபால் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மாவட்டத்தில் திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, கூத்தாநல்லூர், முத்துப்பேட்டை, வலங்கைமான், நீடாமங்கலம் உட்பட மாவட்டம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற் பட்ட இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x