Published : 23 Jul 2021 07:12 AM
Last Updated : 23 Jul 2021 07:12 AM
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் படித்த வேலையில்லாத இளைஞர் களுக்காக வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் 25 சதவீதம் மானியத்தில் தொழில் தொடங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இதுதொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மாவட்ட தொழில் மையம் மூலம் படித்த வேலையற்ற இளைஞர்களுக்காக வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் உற்பத்தி தொழிலுக்கு ரூ.15 லட்சமும், சேவை தொழிலுக்கு ரூ.5 லட்சமும், வியாபாரத்துக்கு ரூ.5 லட்சமும் என திட்ட மதிப்பீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 முதல் 35 வயது வரையில் உள்ளவர்கள் விண்ணப் பிக்கலாம். சிறப்பு பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 45 ஆகும்.இத்திட்டத்தின் மூலம் வங்கிக் கடன் பெறும் பயனாளிகளுக்கு திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதம், அதிகபட்சமாக ரூ.2.50 லட்சம் வரை தமிழக அரசின் மானியமாக வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் சுய தொழில் தொடங்க பயன்பெற விரும்புவோர் www.msmeonline.tn.gov.in/uyegp என்ற இணையதளத்தின் மூலம் இலவசமாக விண்ணப்பிக்கலாம்.
இணையதள விண்ணப்பத் துடன் கல்வித் தகுதிக்கான சான்றிதழ், ரேஷன் கார்டு அல்லது வாக்காளர் அடையாள அட்டை அல்லது வட்டாட்சியரால் வழங்கப்பட்ட இருப்பிடச் சான்று, விலைப்புள்ளி பட்டியல், திட்ட அறிக்கை மற்றும் சாதிச்சான்றிழ் ஆகிய ஆவணங்களுடன் பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், சிட்கோ தொழிற்பேட்டை, கிருஷ்ணகிரி என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பதிவேற்றப்பட்ட விண்ணப்பம் மற்றும் ஆவணங்கள் கூர்ந்தாய்வு செய்யப்பட்டு தொடர்புடைய வங்கி கிளைகளுக்கு தகுதியின் அடிப்படையில் பரிந்துரை செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT